அன்பு ஜோதி ஆசிரமா? பாலியல் கூடாராமா ? அதிர்ச்சியில் அதிகாரிகள் ! படங்கள்….

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமம்  உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை சங்கிலியால் அடித்து சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் எழுந்த சர்ச்சையான புகார்களை தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கெடார் போலீசார் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 33 பெண்கள் உள்பட 142 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்டனர். இதே போல் அன்புஜோதி ஆசிரமத்தின் கிளை ஆசிரமமாக  வானூர் அருகே உள்ள கோட்டக்குப்பத்தில் ஒரு ஆசிரமம் இயங்கி வந்தது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அந்த ஆசிரமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்த 12 பெண்கள் உள்பட 25 பேரை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட 167 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சற்று உடல்நலம் தேறியவர்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வளத்தி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இந்த ஆசிரமத்தில் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும், அவரது தோழி ஒருவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.  மேலும் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட இன்னும் சில பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்கள் யார், யார் என கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் குண்டலப்புலியூர், கோட்டக்குப்பம் ஆகிய ஆசிரமங்களில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 45 பெண்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

3

பாலியல் குற்றம்சாட்டிய விழுப்புரம் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவரும் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரையும் நேற்று விழுப்புரம் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும், தங்களுக்கு நேர்ந்த அநீதிகள், தாங்கள் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்

4

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேரை காவல்துறை கைது செய்திருப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில், ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

ஜூபின் பேபி முதலில் கோவை கோட்டக்குப்பம் பகுதிகளிலும் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். கோவை ஆசிரமத்தில் சில பிரச்சினைகள் எழுந்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் எர்ணாவூரை சேர்ந்த இவர், ஆசிரமத்தைத் தொடங்கி.. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்தும் கூட ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.. இப்படி ஆதரவற்றவர்களைச் சேர்ப்போருக்குக் குறிப்பிட்ட தொகையும் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதற்கிடையே இந்த ஆசிரமத்தில் இருக்கும் பலரையும் இவர் பெங்களூரில் ஆட்டோ ராஜா என்பவர் நடத்தி வரும் ஆசிரமத்திற்குக் கடந்த 2021இல் அனுப்பி ரசீது பெற்றுள்ளார்.

பெங்களூருக்கு அனுப்பப்பட்ட இந்த 15 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவர்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டதற்கான ரசீதையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரில் இவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டிருக்குமோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக ஆட்டோ ராஜையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் ஆசிரமத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவைச் சேர்ந்த விஜி மோகன்(46), பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் என 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை இப்போது சிபிசிஐடி போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இடையில் இன்று 18.02.2023 விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தகவல் தெரிவித்தார். ஆசிரமப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காஞ்சன் கட்டார் கூறினார்.

அனுமதியின்றி அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட அனுமதித்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றன வா என்பது குறித்து ஆராய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி  வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆசிரம் பல போலிஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஆசிரமத்தை வைத்து அதன் செயல்பாடுகளை வெளியே இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் நிதிதிரட்டி இருப்பம் தெரிய வந்துள்ளது. அவர்கள் இணைதயளம், முகநூல் பக்கங்கள் அனைத்தும் முடகப்பட்டுள்ளது. பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரசாங்கம் சார்பில் முதியோர் நிலையம் இல்லாமல் இருப்பது, இந்த மாதிரி தனியார் முதியோர் ஆசிரமங்கள் நடத்துபவர்கள் உயர்மட்ட அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்து இருப்பதும், முறையான அனுமதியில்லாமல் பணம் காய்க்கும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள் இதை அரசு உடனே கவனத்திற்கு எடுத்துக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய நோக்கமாக உள்ளது.

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.