அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை!

திருச்சியில் அடகு நகையை விற்க

பின்லாந்து, உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்நாடு தற்போது இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய குடியுரிமை விதிமுறைகள், மகளிர் நலன்கள் மற்றும் சுகாதாரம், கல்வி சேவைகள் போன்றவற்றை வழங்குவதோடு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியியல் துறையினருக்கு இங்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

பின்லாந்தில் நிரந்தர குடியுரிமைபின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை செய்யும் உரிமை, குடும்பத்தை அந்நாட்டில் குடியேற்றுவதற்கான உரிமை மற்றும் மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்யும் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். ஆனால், இந்தக் குடியுரிமையைப் பெறுவதற்கு இந்தியர்கள் தொடர்ச்சியான நான்கு ஆண்டுகள் பின்லாந்தில் வசிக்க வேண்டும். 2026 ஜனவரி மாதம் முதல் இந்தக் கால அவகாசம் ஆறு ஆண்டாக அதிகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் குறைந்தபட்ச நிபந்தனைகளில் ஒன்றுக்கு உட்பட வேண்டும். அதில் ஆண்டு வருமானம் €40,000 ( இந்திய மதிப்பில் சுமார் ₹41.3 லட்சம்), பின்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை அனுபவம் அல்லது மூன்று ஆண்டுகள் வேலை அனுபவம் வேண்டும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்லாந்தில் நிரந்தர குடியுரிமைநாம் இதற்கு விண்ணப்பிக்கும் முறை இந்தியர்கள் ஆன்லைனில் EnterFinland என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வருடம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 240 யூரோக்கள் ஆகும். 18 வயதிற்குக் கீழானோர் 180 யூரோக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அப்புறம் என்ன நாமும் ஒரு அப்ளிகேஷனை போடுவோம்மா?

 — மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.