அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஃபயர்’    

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ’ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன்’ எழுத்து—இயக்கம் : ஜே.எஸ்.கே.  நடிகர்-நடிகைகள் : பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, ஷாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ். ஒளிப்பதிவு : ஜி,சதிஷ், இசை : டி.கே., வசனம் : எஸ்.கே.ஜீவா, எடிட்டிங் : சி.எஸ்.பிரேம்குமார், ஆர்ட் டைரக்டர் : சுசீ தேவராஜ், நடனம் : மானஸ். பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

‘ஃபயர்’ திரைப்படம் தற்போதைய மனித சமூகத்தை, அதன் இயல்பான மனநிலையை முற்றிலும் சீரழித்துக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ரீல்ஸ், ஆகிய சோஷியல் மீடியாக்களின் வெரி டேஞ்சரஸ் பக்கங்களை, அதன் விபரீத விளைவுகள் நாள் தோறும்  வெளியாகி நடுங்க வைத்துக்  கொண்டிருக்கின்றன. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகர்கோவிலில் சிக்கியவன் காசி என்கிற சோஷியல் மீடியா காமுககன், பிளாக்மெயிலர். இவனிடம் சிக்கி சீரழிந்தவர்கள் எல்லாருமே மெத்த படித்த மேதாவிப் பெண்கள், பணம் கொட்டிக் கிடக்கும் செல்வச் சீமாட்டிகள். நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் [ வயது வித்தியாசமே இல்லாமல் } இவனிடம் சிக்கிச் சீரழிந்து கதறிய உண்மைச் சம்பவம் தான் இந்த ஃபயர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பிஸியோதெரபிஸ்டாக பாலாஜிமுருகதாஸ் தான் காசியாகவே வருகிறார். பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவனிடம் சிக்கிச் சின்னாபின்னமானவர்களாக சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், சாக்‌ஷி அகவர்வால். ஒரு நாள் திடீரென காசி காணாமல் போகிறான். மகனைக் காணவில்லை என இன்ஸ்பெக்டர் சரவணனிடம் [ ஜே.எஸ்.கே.] புகார் கொடுக்கிறார்கள், காசியின் பெற்றோர். ‘மேன் மிஸ்ஸிங் கேஸ்’ புக் பண்ணி விசாரிக்க களத்தில் இறங்கிய பின் தான் இன்ஸ்பெக்டர் சரவணனே கதிகலங்கும் அளவுக்கும் காசியின் காமவேட்டை சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

காசி கிடைத்தானா? அவன் சீரழித்த பெண்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதை உண்மைக் கதையுடனும் நான்கு ஹீரோயின்களின் சதையுடனும் சொல்வது தான் இந்த ‘ஃபயர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இடைவேளை வரை இன்ஸ்பெக்டர் ஜே.எஸ்.கே.வும் அவருக்குத் துணையாக போலீஸ்காரர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ் ஆகியோர் காசியை [ பாலாஜி முருகதாஸ்] தேட ஆரம்பிக்கிறார்கள். அப்படித் தேடும் போது, தோண்டத் தோண்ட, கிளறக்கிளற செக்ஸ் பூதங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் நேர்கோட்டில் திரைக்கதையைக் கொண்டு போகிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஜே.எஸ்.கே.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

படத்துக்கு ‘ஃபயர்’னு டைட்டில் வச்ச பிறகு, அதே மாதிரி போனா என்னாகுறதுன்னு யோசிச்சிட்டாரு போல. சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகிய நால்வரையும் பாலாஜி முருகதாஸ் வசியப்படுத்தி, படுக்கையில் வீழ்த்தி, அதை வீடியோவாக எடுத்து ரசித்து மிரட்டும் கிளுகிளு, குளுகுளுவை முழுவதும் நம்பிவிட்டார் ஜே.எஸ்.கே. இந்த மாதிரி கதைகளுக்கு, இந்த மாதிரி சீன்கள் அவசியம் தான் என்றாலும், அந்த நாலு பேரிடமும் விசாரிக்கும் போது, ஒரு தடவை ஃப்ளாஷ்பேக்காக காட்டியிருந்தால் திகட்டியிருக்காது. அதை மட்டுமே இடைவேளைக்குப் பின்பு நம்பியது தான் ஜே.எஸ்.கே.வின் பலவீனம்.

நான்கு பேரில் சூப்பர் ’எக்ஸ்போஸர்கள்’ லிஸ்ட்டில் முதல் இடத்தில் ரச்சிதா மகாலட்சுமி, இரண்டாம் இடத்தில் சாந்தினி தமிழரசன், மூன்றாம் இடத்தில் சாக்‌ஷி அகர்வால், நான்காம் இடத்தில் காயத்ரி ஷான் ஆகியோர் இருக்கிறார்கள். நாற்பது வயதானாலும் ரச்சிதா ரொம்பவே ரசித்து விளையாடியிருக்கிறார். அடுத்து அரை நிர்வாணத்தில் சாந்தினி தமிழரசன் புகுந்து விளையாடியிருக்கிறார். இவர்களிடமெல்லாம் படுக்கையில் விளையாடிய பாலாஜி முருகதாஸுக்கு நடிப்பு தான் பல்லிளித்துவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து சினிமாவுக்கு வந்த ஆண்கள் யாருமே உருப்பட்டதேயில்லை. பாலாஜி முருகதாஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

இன்ஸ்பெக்டராக வரும் ஜே.எஸ்.கே.வுக்கு ஒரு படத்தில் எட்டு அல்லது பத்து நிமிடங்கள் சீனில் வரக்கூடிய இன்ஸ்பெக்டர் கேரக்டர்னா தாங்க முடியும். படம் முழுக்க, அதிலும் கதையின் நாயகனாக வரும் அளவுக்கு ஒர்த் இல்ல என்பது பல சீன்களில் அப்ப்பட்டமாக தெரிகிறது. ”அண்ணே ஜே.எஸ்.கே. வேண்டாம்ணே இந்த விபரீத விளையாட்டு”. ஆனால் ஒரு தயாரிப்பாளராக பட்ஜெட்டை இறுக்கிப் பிடித்து முக்கால்வாசி சீன்களை ஒரு பங்களாவிலும் போலீஸ் ஸ்டேஷன் இருட்டறை செட்டிலும் எடுத்து முடித்து சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆண்ட்ராய்டு போன் அடிமை யுவதிகள் உஷாராக இருக்க வேண்டிய அவசியத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லிய வகையிலும் யாருமே எதிர்பாராத ஷாக் க்ளைமாக்ஸ் வைத்தும் டைரக்டராகவும் சபாஷ் வாங்கிவிட்டார் ஜே.எஸ்.கே.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.