அங்குசம் சேனலில் இணைய

தொடரும் பட்டாசு ஆலை கொடூரங்கள் ! 3 பேர் பலி ! 3 பேர் படுகாயம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆண்டியாபுரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 50க்கும் மேற்பட்ட அறைகளுடன் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் தொழிலாளர்கள் பணியின் போது மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கார்த்திகேயன் (21), சங்கீதா (45) லட்சுமி (48)
கார்த்திகேயன் (21), சங்கீதா (45) லட்சுமி (48)

இந்த விபத்தில் சிவகாசியை சேர்ந்த கார்த்திகேயன் (21), சங்கீதா (45) லட்சுமி (48)ஆகிய  மூன்று தொழிலாளர்கள் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் காயமடைந்த மாரியம்மாள், (50), நாகலட்சுமி, (55) மாரியம்மாள் (47)ஆகிய மூன்று தொழிலாளர்கள் தொழிலாளர்கள் படுகாயத்துடன் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் உயிரிழந்த வர்களின் உடலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பட்டாசு ஆலை விபத்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை போர் மேன் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலை விபத்துவிபத்து நடந்த பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு  தலா 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தால 1 லட்சமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  —   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.