அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்த திருச்சி மாவட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு !

தேர்தல்‌ பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல்‌ படையினரின்‌ வாத்தியகுழு இசையுடன்‌ கொடி அணிவகுப்பை திருச்சியில் நடத்தினர்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்த திருச்சி மாவட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு !

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ நடைபெற உள்ள மக்களவைத்‌ தேர்தல்‌-2024 முன்னிட்டு வாக்காளர்கள்‌ அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும்‌ பொருட்டு தேர்தல்‌ பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல்‌ படையினரின்‌ வாத்தியகுழு இசையுடன்‌ கொடி அணிவகுப்பை திருச்சியில் நடத்தினர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

மார்ச் 27 அன்று சமயபுரம்‌ ரெட்டியார்‌ மகால்‌ அருகே நடைபெற்ற இந்த அணிவகுப்பை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ டாக்டர்‌. வீ. வருண்‌ குமார்‌, இகாப., கொடி அசைத்து துவக்கி வைத்தார்‌.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த அணிவகுப்பில், திருச்சி மாவட்ட பென்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ குத்தாலிங்கம்‌, திருவெறும்பூர்‌ உட்கோட்ட துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌, அறிவழகன்‌, இலால்குடி உட்கோட்ட துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ (பொறுப்பு) ரவிச்சந்திரன்‌, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌‌ சீனிவாசன்‌ மற்றும்‌ மாவட்ட ஆயுதப்படை துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌‌ சந்திரமோகன்‌ உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த கொடி அணிவகுப்பில்‌ மத்திய பாதுகாப்பு படையினர்‌ – 52 , திருச்சி மாவட்ட ஆயுதப்படையினர்‌ – 75, திருச்சி மாவட்ட சட்டம்‌ ஒழுங்கு பிரிவில்‌ 8 காவல்‌ ஆய்வாளர்கள்‌ உட்பட காவல்துறையினர் ‌- 60 என சுமார்‌ இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்‌.

வாக்காளர்கள்‌ அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும்‌ வகையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பை தொடர்ந்து, நடைபெற உள்ள மக்களவைத்‌ தேர்தல்‌-2024 தொடர்பாக புகார்‌ ஏதேனும்‌ தெரிவிக்க வேண்டி இருப்பின்‌ திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ அவர்களின்‌ உதவி எண் 94874 64651 என்ற எண்ணிற்கு நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் என்பதாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ டாக்டர்‌. வீ. வருண்‌ குமார்‌, இகாப., அறிவித்திருக்கிறார்.

அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.