ஒரே கட்டிட சுவற்றில் பல கட்சி விளம்பரங்கள் அழிப்பு !
அங்குசம் செய்தி தேர்தல் வினோதங்கள் தலைப்பில், சுட்டிக் காட்டினோம். மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகியதால் உரிய அனுமதியுடன் எழுதப்பட்டு உள்ளதா? என தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே கட்டிட சுவற்றில் பல கட்சி விளம்பரங்கள் அழிப்பு !
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிக்க கிராம பகுதிகளில் சுவர் விளம்பரங்களை எழுதி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள கரும்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் சுவற்றில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது சின்னங்களை வரைந்துள்ளனர்.
இந்த புகைப்படம் அங்குசம் செய்தி தேர்தல் வினோதங்கள் தலைப்பில், சுட்டிக் காட்டினோம். மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகியதால் உரிய அனுமதியுடன் எழுதப்பட்டு உள்ளதா? என தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை அந்த கட்டிடத்தின் மீது வரையப்பட்டு இருந்த சின்னங்கள் அழிக்கப்பட்டு கட்டிடத்தின் மீது யாரும் கட்சி சின்னங்கள் வரையக்கூடாது என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன்.கா.