”முட்டாள்கள், தற்குறிகளை ஃபோகஸ் பண்ணும் மீடியாக்கள்” – போட்டுத் தாக்கிய அமைச்சர் !
மலேசியாவில் இருபத்தேழு ஆண்டுகளாக ‘நம்பிக்கை’ என்ற சேனலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் இங்கே சென்னையில் தேர்தல் நேரத்தில் வந்திறங்கி ‘நம்பிக்கை’ டிஜிட்டல் மீடியாவை ஆரம்பித்திருக்கிறார்கள். இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை நடந்தது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், நாதக சீமான், தவெக நாஞ்சில் சம்பத் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள், சரத்குமார், ராதிகா, நாசர், ரேகா நாயர், உட்பட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல் சீமான் கர்ஜிக்காமல் அமைதியாகப் பேசினார். மேடையில் சரத்குமாரின் கையைப் பிடித்துக் கொண்டே நின்றார்.
சரத்குமார் பேசும் போது,
“உண்மைகளை மட்டுமே எழுத வேண்டும், பேச வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான் பத்திரிகைகளுக்கும் மீடியாக்களுக்கும் இருக்க வேண்டும்” என்றார்.

ராதிகா பேசும் போது,
“வெறும் பிரேக்கிங் நியூஸ்களை மட்டும் போடாமல் பொறுப்போடு செயல்பட வேண்டும்” என்றார்.
“நல்லா இருக்கும் சினிமாக்களைக்கூட விஷமத்துடனும் திரித்தும் நியூஸ் போடுவதால் நான் சேனல்களைப் பார்ப்பதையே நிப்பாட்டிடேன்” என உண்மையைப் பேசினார் நடிகர் நாசர்.
“சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கத்தால் எதார்த்தத்தை இழக்கும் சூழலில் தான் நாம் இருக்கோம். களத்தில் இருந்து எந்தளவுக்கு உண்மைத்தன்மையுடனும் நேர்மையுடனும் செய்திகளைக் கொடுத்தால் தான் நம்பிக்கையைப் பெற முடியும். உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். ஆனால் இப்போது பெரும்பாலான ஊடகங்கள், வெட்டிப் பேச்சு, கவர்ச்சிப் பேச்சு முட்டாள்களையும் தற்குறிகளையும் தான் ஃபோகஸ் பண்ணுகிறது. புத்திசாலிகளை வாயடைத்து விடுகிறது. யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேளுங்க, சுட்டிக்காட்டுங்க” என சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.