இடிந்து விழும் நிலையில் வீடுகள் ! நெருக்கடி கொடுக்கும் வனத்துறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இடிந்து விழும் நிலையில் வீடுகள் ! சீரமைக்கத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கும் வனத்துறை ! மேகமலை, ஹைவேஸ் உள்ளிட்ட ஏழு மலைகிராமங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இப்பிரச்சினையில் தலையிட்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, மேகமலை ஹைவேஸ், மணலார், அப்பர் மணலார், வெண்ணியர், மகாராஜா மெட்டு, இரவங்கலார் உள்ளிட்ட ஏழு மலை கிராமங்களில் 3000 வீடுகள் அமைந்துள்ளது.  இந்த ஏழு மலை கிராமங்களுக்கு தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் இருந்து மகாராஜா மெட்டு வரை 48.3 கிலோ மீட்டர் பட்டா நில சாலையாக இருந்தது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந்த பட்டா சாலையாக இருந்ததை வருவாய் துறை சாலையாக தமிழக அரசு மாற்றிவிட்டது. இங்கு வசிக்க கூடிய மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், தேவையான சாமான்கள் அனைத்தும் சின்னமனூரில் இருந்து வாங்கி பேருந்துகள், வாகனங்களில் கொண்டு சென்று வந்தனர்.

மேகமலை
மேகமலை

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த நிலையில் தற்போது இந்த பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூர் வன புலிகள் சரணாலயமாக மாற்றி விட்டதாகக் கூறி, வீடுகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்து தென்பழனியில் சோதனை சாவடி அமைத்து தடுத்து நிறுத்தி வருகின்றனர், வனத்துறையினர்.

இதனால், இந்த பகுதியில் உள்ள சுமார் 3000 –க்கும் அதிகமான பாழடைந்த, பழுதடைந்த, இடிந்து விழும் வீடுகளை சீர்செய்ய முடியாமல், எப்போதும் இடிந்து விழும் அச்சத்தின்பிடியில் வாழ்ந்து வருகிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

மேகமலை வீடுகள்
மேகமலை வீடுகள்

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக தளவாடப் பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜெய்ஸ்ரீராம்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.