அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இலவச ஃபோர்க்ஃலிப்ட் ஆபரேட்டர் (Forklift Opreator) பயிற்சி தாட்கோ அறிவிப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழங்கும் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Opreator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Opreator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இப்பயிற்சியானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர்களின் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாவும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு மாதம் ஆகும். மேலும் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.