‘ஃபோர்த் ஃபுளோர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
‘மனோ கிரியேஷன்ஸ்’ சார்பில் ராஜா தயாரிப்பில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபோர்த் ஃபுளோர்'(4th Floor ). த்ரில்லர் ஜானரிலான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ்ப் புத்தாண்டு நாளில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் ரிலீஸ் பண்ணி படக்குழுவை பெருமைப்படுத்தியுள்ளனர்.

“சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத த்ரில்லர் அனுபவத்தை தரும்” என்கிறார் இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி.
கதாநாயகனாகஆரி அர்ஜுனன், நாயகியாக தீப்ஷிகா. இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் டிரெய்லர்& இசை வெளியீடு பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில் நுட்பக்குழு
நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ்
ஒளிப்பதிவு : ஜே.லக்ஷ்மன்
இசை : தரண் குமார்
பாடலாசிரியர் : கு கார்த்திக்
எடிட்டர்: ராம் சுதர்ஷன்
கலை: சுரேஷ் கல்லேரி
நடனம் : அபு சால்ஸ்
ஸ்டண்ட்: டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு : ஏ.ராஜா
— மதுரை மாறன்.