அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி மகத்தான சேவையில் ‘துப்பாக்கி’ வெங்கடேசன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி படைக்கலத் தொழிற்சாலை என்றழைக்கப்படும் OFT யில் பணியாற்றிக்கொண்டே, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அரசுப்பள்ளி மாணவர்களைத் தேடி சென்று அவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளித்து வருகிறார் இரா.வெங்கடேசன் என்ற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்தியது. மகத்தான சேவையாற்றி வரும் வெங்கடேசன் அங்குசம் இதழிடம் உரையாடுகின்றார்.

“திருப்பத்தூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத குனிச்சி என்னும் குக்கிராமத்தில் 1977ஆம் ஆண்டு இராஜூ – கர்ணம்மாள் இணையருக்குப் பிறந்தேன். எனக்கு சரவணக்குமார் என்றும் ஒரு சகோதரர் மட்டுமே. தாய், தந்தை அன்றாம் கூலி வேலை செய்து பிழைத்து வாழக்கூடிய எளிய குடும்பம் எங்கள் குடும்பம்.

SIR Tamil Movie

எங்கள் கிராமத்தில் என் சகோதரர் தன் நண்பர்களுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பார். நான் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பின்னர் என் நண்பர்களுடன் விளையாடுவேன். +2 படித்துக்கொண்டிருக்கும்போது பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கப்போட்டி திருப்பத்தூர் டான்பாஸ்கோ கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் பங்குபெற்று நான் 2ஆம் பரிசு பெற்றேன். மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

துப்பாக்கி வெங்கடேசன்
துப்பாக்கி வெங்கடேசன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அப்போது, என்னை அழைத்துச் சென்ற மாமாவை சதுரங்கப் போட்டியின் நடுவர் அழைத்து,“வெங்கடேசன் நன்றாக விளையாடுகின்றார். அவருடைய காய் நகர்த்தல்கள் சிறப்பாக உள்ளது. இவருக்கு முறையாகப் பயிற்சி கொடுத்தால், மாவட்ட, மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பரிசுகளைப் பெறுவார்” என்று கூறினார்.

பின்னர் நான் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்குப் பயிற்சி பெறுகிறேன். சதுரங்கத்தில் கவனச் சிதறல் இருக்கக்கூடாது என்று மெழுவர்த்திகளை ஏற்றி வைத்து, அதை உற்றுப் பார்க்க சொல்லுவார். பார்ப்பதை 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடமாக உயர்த்தி பயிற்சிகள் அளிப்பார். 1994 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி வேலூரில் நடைபெற்றது. அதில் நான் வெற்றி பெற்றேன். இந்த செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்து. எங்கள் கிராம மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. மக்கள் என்னைக் கொண்டாடினார்கள். என்னை பிரகாசிக்க வைத்த நடுவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

நான் மாநில அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். ”சென்னையில்தான் பயிற்சி. ஒரு வகுப்பிற்கு ரூ.500/- செலவாகும். கம்பியூட்டர் வாங்கவேண்டும். அதில்தான் நுணுக்கமாக விளையாட முடியும்” என்றார் நடுவர். ஏழ்மை நிலையில் இருந்த தந்தை நம்மால் முடியாது என்கிறார். சதுரங்கப்போட்டியின் கனவுகள் எல்லாம் மாவட்ட அளவிலே முடிந்துவிட்டது” என்று கண்கலங்கிய வெங்கடேசன் வழிந்த விழிநீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து நம்மோடு உரையாடினார்.

“நான் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது இன்றைக்கும் எனக்கு இரணமாக இருந்து வந்தது. படைக்கலத் தொழிற்சாலையில் பணியில் இணைந்து என் வறுமை ஒழிந்து, ஓரளவு வளம் பெற்றேன். தொடர்ந்து பூலாங்குடியில் என் வீட்டில் செஸ் அகாடமி என்னும் சதுரங்கம் போட்டிக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்.

துப்பாக்கி வெங்கடேசன்
துப்பாக்கி வெங்கடேசன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பூலாங்குடியைச் சார்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் என 100 பேர் என்னிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள். நான் சதுரங்கப்போட்டியில் மாவட்ட அளவில் நின்றுவிட்டேன். என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டணம் எதுவும் வாங்காமல் அவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகிறேன்.

நான் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சதுரங்கப் போட்டிக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதைக் கேள்வியுற்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னை அழைத்து பாராட்டினார். தலைமையாசிரியர்கள் பலரும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பள்ளிகளுக்கே நேரடியாக சென்று பயிற்சி அளித்து வருகிறேன். சதுரங்கப் போட்டியின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தருகிறேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் மாவட்ட அளவில் வெற்றிப் பெற்றுகிறார்கள். அண்மையில் மொராய்சிட்டி BV குளோபல் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் முறையே 5, 10, 7, 12 ஆகிய இடங்களைப் பிடித்து வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெற்றி பெற தொடர்ந்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறேன். நிறைவேறாத என் கனவை இந்த அரசு பள்ளி மாணவர்கள் வழியாக நிறைவேற்ற வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறேன். என் கனவு நிறைவேறும்” என்று உறுதிபட கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

மாணவர்களுக்கு அந்தப் பயிற்சி கொடுக்கிறோம், இந்தப் பயிற்சி கொடுக்கிறோம் என்று பள்ளிகளும், பல நிறுவனங்களும் மாணவர்களிடம் பயிற்சிக்காக பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதை நாகரிகம் என்று கடந்து செல்லும் இக் காலத்தில், சதுரங்கப் பயிற்சிக்கு எந்தவிதமான தொகையும் பெறாமல் செஸ் அகாடமியைத் தொடர்ந்து நடத்திவரும் சமூக நல ஆர்வலர் வெங்கடேசன் அவர்களின் இந்த முயற்சி வெல்லவேண்டும். அவரது மகத்தான சாதனைகளுக்காக அங்குசம் அவரை நெஞ்சார வாழ்த்தி விடைபெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு :

குனிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். +2 படிப்பைத் திருப்பத்தூர் CSM பள்ளியில் படித்தேன். பின்னர் திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் EEE 3 ஆண்டுகள் படித்தேன். படைக்கலத் தொழிற்சாலையில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியில் சேர்ந்தேன். பணி செய்துகொண்டே 3 ஆண்டுகள் இளநிலை வரலாறு, 2 ஆண்டுகள் முதுநிலையில் வரலாறு படித்து பட்டங்கள் பெற்றேன். மாலை நேரக் கல்லூரியில் எனக்குப் பெரும் விருப்பமான இளநிலை கணிதம் படித்து பட்டம் பெற்றிருக்கிறேன். தற்போது பூலாங்குடி எனும் கிராமத்தில் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.

துப்பாக்கி வெங்கடேசன்
துப்பாக்கி வெங்கடேசன்

என் துணைவியார் சத்யா. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றது. அவர் ஒரு கிராமப்புறம் சார்ந்தவர். +2 வரை படித்திருந்தார். திருமணத்திற்குப் பின் இளநிலை, முதுநிலையில் அவரும் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் பி.லிட். பட்டமும் பெற்றுள்ளார். தற்போது துவாக்குடி சுகாதார மையத்தில் துணைசெவியராகப் பணியாற்றி வருகிறார். ஒரே மகள் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

– ஆதவன்

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.