அங்குசம் சேனலில் இணைய

கலைஞர் 102 – ஆவது பிறந்தாள் – இலவச கண் பரிசோதனை முகாம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகர் வடக்கு திமுக கிளை கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அதவிந்த கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த 15.06.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நவல்பட்டு, பர்மா காலனியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்வை ஒருங்கிணைத்தவர் நவல்பட்டு அண்ணா நகர் வடக்கு திமுக கிளைக்கழகச் செயலாளர் பொறியாளர் எஸ்.தங்கமணி. இந்த முகாம் காலை 7.00 மணிக்குத் தொடங்கி பகல் 1.00 மணி வரை நடைபெற்றது.

இலவச கண் பரிசோதனை முகாம் கலைஞர் 102-ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த இலவச கண் பரிசோதனை முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாற்றினார். “தமிழகத்தின் நவீன சிற்பியான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை திமுக கழகம் சீரும் சிறப்புமாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அண்ணா நகர் வடக்கு கிளை சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துவது பாராட்டுக்குரிய செய்தியாகும். இந்த முயற்சியை எடுத்த கிளைக் கழகச் செயலாளர் பொறியாளர் தங்கமணி அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற சமூகம் பயன்பெறும் செயல்களில் திமுக செயல்வீரர்கள் ஈடுபட்டு திமுகழகத்திற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று உரையை நிறைவு செய்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இலவச கண் பரிசோதனை முகாம் இவ்விழா குறித்து நவல்பட்டு அண்ணா நகர் வடக்கு கிளைக் கழகச் செயலாளர் பொறியாளர் தங்கமணி அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது,“தலைவர் கலைஞரின் 102ஆவது பிறந்தநாளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தினோம். இந்நிகழ்வுக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் அவர்கள் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.

இவ் விழாவில், திருவெறும்பூர் ஒன்றிய தெற்கு செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட பல்வேறு கிளைக்கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அறிவிப்பை கடந்த ஒரு வார காலம் குண்டூர், திருவளர்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி, அயன்புத்தூர், நவல்பட்டு அண்ணா நகர் முழுவதும் ஆட்டோவில் அறிவிப்பு செய்தும், துண்டறிக்கைகள் கொடுத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குறித்த தகவலைத் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இலவச கண் பரிசோதனை முகாம் பரிசோதனையின் முடிவில் அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் முகாம் நடைபெற்ற அன்றே (15.06.2025) மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வேன்கள் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவைசை சிகிச்சை, IOL 3லென்ஸ், மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து என அனைத்தையும் இலவசமாகவே வழங்கினோம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 200mgக்குள் இருக்கும் கண்புரை உள்ளவர்கள மட்டுமே மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த முகாமில் பங்கெடுத்துப் பயன்பெற்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்களும் சோதனைகளை மருத்துவர்கள் செய்தனர். முகாமில் 40 வயதுக்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வைப் பாதிக்கும் கண்நீர் அழுத்த நோய் என்னும் கொடி நோயால் பார்வை இழக்கும் வாய்ப்பு உள்ளதால் கண்நீர் அழுத்த நோய்க்கான பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இலவச கண் பரிசோதனை முகாம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறுகள் இருந்தவர்களுக்கு தகுந்த பரிசோதனை செய்து, பின்னர் உரிய கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்டன. ரூ.300/- என்னும் சலுகை விலையில் முகாம் நடைபெற்ற இடத்திலேயே கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும முகதவசம் அணிந்து வந்தனர். அப்படி அணிந்து வராதவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டன. முகாமில் பயன்பெற்ற ஏழை, எளிய மக்கள் முகவரி சான்றின் நகல்கள், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்களார் அடையாள அட்டைகளைக் கொண்டு வந்தும் தொலைபேசி எண்களைக் கொடுத்தும் முகாமில் பதிவு செய்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலை உணவு, பகல் உணவு வழங்கப்பட்டது” என்று கூறினார்.

கலைஞர் பிறந்தநாளில் ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமுகாம் நடத்திய நவல்பட்டு அண்ணா நகர் வடக்குக் கிளைக் கழகச் செயலாளர் தங்கமணி அவர்களின் சீரிய பணியைப் பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

—      ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.