அந்த நாள் ஞாபகம் … !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முப்பது ஆண்டுகளை கடந்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு, கடந்த ஜூலை 21 அன்று திருச்சியில் நடைபெற்ற நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பு கவனத்தைப் பெற்றிருக்கிறது. திருச்சி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமை பெற்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

80-களில் திருச்சி மாவட்ட ஆட்சியராக தன்னோடு பணியாற்றிய சக ஊழியர்களான ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும் தனது முன்னாள் தனி உதவியாளருமான மாரியப்பன் மற்றும் ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரின் ‘சதாபிஷேக’ (80-வது பிறந்தநாள்) நிகழ்வைக் கொண்டாடும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு, சாந்தா ஷீலா நாயரின் பிறந்தநாளில் அமைந்துபோனது அனைவரின் மகிழ்வை இரட்டிப்பாக்கியது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிகழ்வில், சாந்தா ஷீலா நாயரின் ஆளுமையின் கீழ் திருச்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திய பாரம்பரிய பெருமை கொண்ட ‘ஸ்கோப்’ (SCOPE) அமைப்பைச் சேர்ந்த பத்மஸ்ரீ மராச்சி சுப்புராமன், ‘சேவை’ (SEVAI) கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றிருந்தார்கள்.

மேலும், ராஜேஸ்வரி சுப்புராமன் மற்றும் தங்கவேல் ஆகியோர் இனிமையான பாடல்களைப் பாடி நிகழ்வை இனிமையாக்க,  ‘இன்பசேவா சங்க’த்தின் பிரதிநிதி கண்ணகி  உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

–              கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.