ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி விஷன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, கதிர் ஒளி அறக்கட்டளை சார்பில் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அந்தநல்லூர் சீராதோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் பாலசுப்ரமணி வரவேற்றார்.

லயன்ஸ் சங்க வட்டார தலைவரும், கதிர் ஒளி அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் சரவணன், பஞ்சநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ருக்குமணி, இயற்கை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோக ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், புவி வெப்பமயமாதலைத் தடுத்து, பூமியைக் காப்பாற்ற ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய இன்றியமையாத கடமை ஆளுக்கொரு மரம் வளர்ப்பதாகும்.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற காலம் மலையேறி, இன்று ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியமான கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனிதனின் பேராசையால் காடுகள் அழிக்கப்பட்டு, இயற்கையின் சமநிலை குலைந்து வருகிறது. இதற்குத் தீர்வு காண ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற கொள்கையை நாம் கையில் எடுக்க வேண்டும்.மரங்கள் நாம் வெளிவிடும் கரியமில வாயுவை உறிஞ்சிவிட்டு, நமக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வழங்குகின்றன.

மேகங்களை ஈர்த்து நல்ல மழையைப் பொழியச் செய்வதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, குளிர்ந்த சூழலைத் தருகிறது. பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு மரங்கள் உறைவிடமாகவும் உணவாகவும் விளங்குகின்றன.பெருநகரங்களில் மரங்கள் இல்லாததால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது பிறந்தநாள், திருமண நாள் போன்ற சிறப்பு நாட்களில் மரக்கன்றுகளை நட்டுப் பரிசளிக்க வேண்டும். நட்ட மரங்களை நமது சொந்தக் குழந்தை போலத் தண்ணீர் ஊற்றிப் பாதுகாக்க வேண்டும்.”மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” என்பது வெறும் வாசகம் அல்ல; நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம். “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம், இயற்கையைக் காப்போம்” என்ற உறுதிமொழியை ஏற்றுப் பசுமையான பூமியை உருவாக்குவோம் என்றார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.