திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தோழமை பொங்கல் விழா கொண்டாட்டம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை சார்பாக செப்பர்டு பணிசெய்யும் பல்வேறு கிராமங்களில் தோழமை மற்றும் சமத்துவ பொங்கல் விழா கல்லூரியின் அதிபர் தந்தை செயலர் தந்தை முதல்வர் தந்தை ஆகியோர் வழிகாட்டுதலின் படி விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சேச அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் செயின்ட் ஜோசப் கல்லூரியின் பல்வேறு துறைகளிலிருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள் தமிழாய்வுத்துறையிலிருந்து பாலசமுத்திரப்பட்டியில் முனைவர் முரளி கிருஷ்ணன், கிரிகல்மேடில் முனைவர் சலேத், குள்ளம்பட்டியில் முனைவர் அடைக்கலராஜ், முனைவர் ராஜா, இணையதள நிர்வாகி ரோசாரியோ, தளிஞ்சியில் முனைவர் பட்ட ஆய்வாளர் செபாஸ்டின் செல்வகுமார், கிழப்புதுப்பட்டியில் வணிகவியல் துறை முனைவர் நித்திலா, செந்தியாணிப்பட்டி அளுந்தூரில் முனைவர் பெருமாள், கும்பகுறிச்சியில் முனைவர்பட்ட ஆய்வாளர் ஜோவின், புரசம்பட்டி காலனியில் வணிகவியல் துறை ஹனர்ஸ் முனைவர் பாஸ்டின் ஜெரோம், பேரா பிரபாகரன், பேரா ஷெர்லீன் வினோதா, முனைவர் ஜெர்ரி ரிச்சர்டு, அழகாபுரியில் கணினி அறிவியல் துறை முனைவர் ஜோசப் சார்லஸ், முனைவர் சுபாஷ், சூராவளிப்பட்டியில் ஆங்கிலத்துறை முனைவர் உக்கிரபாண்டியன், சேதுராப்பட்டி எரங்குடியில் இயற்பில் துறை முனைவர் அலெக்ஸாண்டர், தர்மநாதபுரத்தில் மனித வள மேலாண்மைத்துறை முனைவர் மைக்கேல் ஆகியோர் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
மகளிருக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பரிசுகள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.
கௌதநாயக்கன்பட்டியில் ஊர் தலைவர் ஆரோக்கியசாமி, பூவாயிபட்டியில் ஊர்த்தலைவர் கந்தசாமி, திருமலைசமுத்திரத்தில் விவசாய சங்கத்தலைவர் பழனிசாமி, மேலப்பச்சக்குடி ஊராட்சி மேனாள் தலைவர் செல்வி சுப்ரமணி, ஊர் முக்கியஸ்தரர்கள் குழந்தைகள் மற்றும் கிராம பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவை கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், லெனின், ஜெயசீலன், சுதாகர், திருமதி யசோதை ஆகியோர் இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.