FRS APP மூலம் காவலா்களின் தொடா் கண்காணிப்பில் குற்றவாளிகள் !
துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் துவாக்குடி நிலைய காவலர்கள் தினந்தோரும் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றிதிரியும் சந்தேக நபர்கள், திருட்டு குற்றம் புரிபவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதனால் கைது செய்யப்படுபவர்கள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், முன் தண்டனை பெற்று பின்னர் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் உள்ளவர்கள், ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள், கண்காணிக்கப்பட்டு வருகின்ற ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஆகியோரை தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சோதனை செய்து 5 நபர்களுக்கு குறையாமலும்…..
இரவு நேரங்களில் சந்தேகப்படும் படியாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரிபவர்களில் 20 நபர்களுக்கு குறையாமல் சந்தேக நபர்களை பிடித்து அவர்களது முகத்தை FRS APP என்ற Face Recognition Software என்ற செயலியில் Upload செய்து ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு உள்ளாரா அல்லது குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டு போலீசாரல் தேடப்பட்டு வருபவர்களா என்பதை சரிபார்த்து அவர்களை காவல் நிலையத்தில் மின்னணு கைரேகை பதிவு இயந்திரம் மூலமாக கைரேகை பதிவு எடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் முதல் குற்றவாளிகள் வரை அனைவரையும் துவாக்குடி காவல் நிலைய காவலா்கள் FRS APP மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.