அரசியலுக்காக மருத்துவமனையை விற்கும் பிரபல மருத்துவர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் மதுரையை சேர்ந்த மருத்துவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவை சேர்ந்த அரசியல்வாதியுமான டாக்டர் சரவணன். மதுரையில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டிஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்து நிர்வகித்துவரும் டாக்டர் சரவணன் அடிப்படையில், புற்றுநோயியல் மருத்துவர். இவர், சூர்யா டிரஸ்ட் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி, அதன்வழியே பல்வேறு சமூக சேவைகளையும் தனது மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தவர். திமுகவில் மாநில மருத்துவர் அணி பொறுப்பில் இருந்தவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். பின்னர், பல்வேறு அரசியல் காரணங்களால் திமுக, பாஜக ஆகிய கட்சிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இறுதியாக அதிமுகவில் எடப்பாடியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருபவர்.

” ராமருக்கு அணில் எப்படி பாலமாக இருந்ததோ அதேபோல் மதுரையில் எடப்பாடியாருக்கு நான் இருப்பேன்” என்றவர்,  தனது மருத்துவமனையை விற்றுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட போகிறேன்” என்பதாக, எப்போதும்போல அதிரடிகிளப்பியிருக்கிறார் மருத்துவர் சரவணன். பின்னணி என்ன?

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த முறை ராஜ்யசபா சீட்டு மதுரைக்காரர்களுக்கு எனவும் தென் மாவட்டத்தில் ராஜ்யசபா எம்பி எடப்பாடி ஜாதி ரீதியாக டிடிவி , ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராக இரண்டு சீட்டில் ஒன்று தென் மாவட்டத்திற்கு அதுவும் மதுரையில் தனது விசுவாசியாக இருக்கக்கூடிய அகமுடைய சமுதாயத்தைச் சேர்ந்த சரவணனுக்கு கொடுக்கப்போவதாக கட்சியினர் உள்ளே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அதில் டாக்டர் சரவணனுக்கு கொடுக்கலாம் என கட்சி தலைமை முடிவெடுத்து இருக்கிறது என கூறுகின்றனர். அதை மூத்த நிர்வாகி ஒருவரி டம் நாம் கேட்டபோது தலைவர் எடப்பாடி சமுதாய ரீதியாக எதிர்க்கும் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் சமுதாயத்திற்கு எதிராக ராஜ்யசபாவில் தனக்கு வேண்டியவருக்கு கொடுக்க வேண்டும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

போன முறை அதிமுகவில் ராஜ்ய சபா தேர்தலில்  போட்டியிட மறுத்தபோது துணிச்சலாக திமுகவை எதிர்த்து நின்று கட்சி நிதியை விட தனது சொந்த நிதியை செலவு செய்தார். ஆனால், அவருக்கு கட்சியினரும் மாவட்ட செயலாளர்கள் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகிய இருவரும் தனக்கு எதிராக வந்து விடுவார் என ஒத்துழைப்பு கொடுக்காதால் தோல்வியை தழுவினார்.

இதை கேள்விப்பட்ட டாக்டரின் தாயார் மன வேதனையில் இறந்து போனார். அவர் இறப்பிற்கு இவர்கள்தான் காரணம். இது எடப்பாடிக்கும் நன்றாக தெரியும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராம்நாடு ஆகிய தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் பதவிகளும், முக்கிய பொறுப்புகளும் எப்போதும் கொடுத்து வருகின்றனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அதில் அகமுடையார் சமுதாயத்தை புறக்கணிக்கிறார்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து பொறுப்புகளும், பதவிகளும் தந்திருந்தார்கள் எடப்பாடியும் அதே போல் தான் ராஜ்யசபா சீட் இந்த முறை மதுரைக்கு கொடுக்க வேண்டும்.

டாக்டர் சரவணன் சாதாரண அடிமட்ட தொண்டனையும் அரவணைத்து கொள்பவர் வெற்றி பெற முடியாத திருப்பரங்குன்றம்  தொகுதியில் திமுக சார்பில் நின்று எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

தென்மாவட்டத்தில் கள்ளர், மறவர் சமுதாயத்தினர் முக்கிய பொறுப்பில் இருக்கும் போது ஏன் அகமுடையார் சமுதாயத்தில் உள்ளவர்க்கு ராஜ்யசபா சீட் கொடுக்க கூடாது? எடப்பாடி இந்த முறையை கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணனுக்கு கொடுக்கனும் கண்டிப்பாக இதை தான் எடப்பாடியும் முடிவு செய்திருக்கின்றாராம் என கூறினர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் டாக்டர் சரவணனை தொடர்பு கொண்டோம்..

”தலைமை கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். ராமருக்கு அணில் எப்படி பாலமாக இருந்ததோ அதேபோல் மதுரையில் எடப்பாடியாருக்கு நான் இருப்பேன். முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த அதிமுகவை எப்படி தொண்டர்களை அரவணைத்து கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார்களோ அதேபோல் அண்ணன் எடப்பாடி அதே  வழியில் கழகத்தை வழி நடத்துகிறார்.

அவர் பாதையை நோக்கி நான் செல்வேன். அதேபோல் எனது டாக்டர் தொழிலையும் மருத்துவமனையையும் விற்றுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப் போகிறேன்” என நம்மிடம் கூற நாம் திரும்பவும் மருத்துவமனையை விற்கப் போகிறீர்களா? என்றதும் ஆம் உண்மைதான். மறுபடியும் கூறுகிறேன். எனது டாக்டர் தொழிலையும் மருத்துவமனையையும் விற்றுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறேன் என்றார்.

—  ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.