ஜி. வி. பிரகாஷின் ‘ கிங்ஸ்டன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’-ல் ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு :கோகுல் பினோய், இசை:ஜி. வி. பிரகாஷ், வசனம் : தீவிக் , படத்தொகுப்பு : ஷான் லோகேஷ், கலை இயக்கம் :எஸ். எஸ். மூர்த்தி, சண்டைக் காட்சிகள்: திலீப் சுப்பராயன். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. வரும் மார்ச் 07-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாவதால் இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள “ராசா ராசா…” எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, ஜி..வி. பிரகாஷ், பாடகி சுப்லாஷினி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்… அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
— மதுரை மாறன்.