பக்தர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மதிக்காத அமைச்சர் சேகர் பாபு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான, பழனியில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி தைப்பூசத்திருவிழா – 2025 கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதற்காக பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமை வகித்தார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் , இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்., மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரதீப் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்ரமணி மற்றும், உறுப்பினர்கள்,   நிர்வாக அதிகாரி மாரிமுத்து   முன்னிலை  வகித்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார்.  “பக்தர்களுக்கு என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளாட்சி, நகராட்சி, மருத்துவம், குடி தண்ணீர், வருவாய்த்துறை உணவு  மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளின் பணிகளை தொகுத்து வழங்கினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

பத்திரிக்கையாளரை மதிக்காத அமைச்சர்
பத்திரிக்கையாளரை மதிக்காத அமைச்சர்

அப்போது, பக்தர்களுக்கு நடந்து வரும் பாதைகளில அவ்வப்போது தூய்மைப் பணயாளர்களை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் என்றும்; தூய்மைப் பணியாளர்களின் பணிகளை வரையறுத்து பகுதி பகுதியாக பிரித்து பணிச்சுமை இல்லாமல் பணி செய்யப்படும் என்றும்; வருவாய்துறை சார்பில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கும் பொறுப்பு அதிகாரிகளை நியமித்து பாதுகாப்பு வழங்கப்படும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தங்கு தடையின்றி குடிநீர் வசதிகள் செய்யப்படும்; இலவச தரிசனம் மற்றும் இலவச பேருந்து வசதிகள் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக செய்ய ஆலோசனைகள் வழங்கியது குறித்து விரிவாக பேசினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும், தேவைப்பட்டால் காவல்துறை தலைவரிடமும், அரசிடமும் பேசி வெளி மாவட்டங்களில் இருந்தும் தேவையான அளவிற்கு காவல்துறையினர்களை வரவழைத்து பக்தர்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்படும் என்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடமும் இவற்றையே கூறினார்.  பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து பேசுகையில்,  சாதாரண நாட்களில் வரும் பக்தர்களையே இந்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தற்காலிக கோவில் பணியாளர்கள் மரியாதைக் குறைவாக நீ, வா, போ என்று மரியாதைக் குறைவாக பேசியும், சில நேரங்களில் இரத்தம் வருமாறு அடித்தும், சன்னதியில்  பெண் காவலர்களோ, பெண் தற்காலிக கோவில் பணியாளர்களோ  பணிக்கு அமர்த்தாத நிலையில்  பெண் பக்தர்களை அங்கு பணியாற்றும் ஆண்பணியாளர்கள் கையை பிடித்து போ என தள்ளி விடுகின்றனர்.  இது போன்ற நிகழ்வுகள் சென்ற ஆண்டு நடைபெற்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே இந்த ஆண்டு பக்தர்களுக்கு அவர்கள் புறப்பட்டு வரும் இடத்திலிருந்து அடிவாரம் வரையில் வழங்கப்படும் பாதுகாப்பு வசதிகளை, பல்வேறு விரதங்கள் மற்றும் கட்டுப்பாடோடு முருகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு  சன்னிதானத்தில் போதிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?  என்று நிருபர் கேட்ட கேள்விக்கு இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன், நீயே பேசிட்டே இரு என்று   பத்திரிக்கையாளர்களை  மரியாதைக் குறைவாகவே பேசினார்.   சமீபத்தில் இது போன்ற  சம்பவத்தினை திருச்செந்தூர் கோவில் முன்பு பக்தர்களின் குறைகளுக்கு ஒருமையிலேயே   பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநில முதல்வரே, பத்திரிக்கையாளர்களிடம் மரியாதையாக பேசும்போது அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அதுவும் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு பொறுப்புள்ள மாநில அமைச்சரே இப்படி பேசினால், எப்படி? என்பதாக பத்திரிகையாளர்கள் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினர்.

 

—   பழனி பாலு.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.