திருச்சியில் 154 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் -2023
154வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் -2023
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் காட்டூர் கிளை பகுதிகளில் 154வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் பாலாஜி நகர் சக்தி நகர் மற்றும் காட்டூர் பகுதிகளில் நடைபெற்றது.
பாலாஜிநகரில் காட்டூர் பகுதிக்குழு தமுஉக ச தலைவர் தோழர் கிருஷ்ணமூர்த்தி; சக்தி நகர் பகுதியில் செயலாளர் தோழர் லெனின் காட்டூர் பகுதியில் துணைத்தலைவர் தோழர் கருப்பன் ஆகியோர் தலைமையிலும் பொருளாளர் தோழர் பத்மநாபன் ஒத்துழைப்போடு இப்பிரச்சாரம் கொண்டாடப்பட்டது. இப்பிரச்சாரத்தில் தேசத்தந்தை காந்தியடிகள் இன்னும் ஏன் தேவைப்படுகிறார் ? என்ற தலைப்பில் தமுஎக சங்க தோழர்களும் அந்தந்த பகுதி தலைவர்களும் மற்றம் பல்வேறு அமைப்பினரும் புகழுரை சாற்றினர்.
புகழுரையின் மைய கருத்தாக காந்தியடிகளின் கொள்கைகளான உண்மை அஹிம்சைம த நல்லிணக்கம் மனிதநேயம் சமதர்மம் வன்முறையில்லாமல் போராடும் குணம் அனைவரிடமும் அன்பு பல்வேறு நற்சிந்தனைகள் அவருடைய போராட்டங்கள் அதன்மூலம் பெற்ற வெற்றிகளையும் கோடிட்டு காட்டி இன்றைய சமூக அவலநிலையிலிருந்து விடுபட்டு நல்லதொரு சமூகச் சூழல் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் செயலாளர் ரெங்கராஜன் தமுஎகச மாநகரத்தலைவர் இளங்குமரன்; ஆகியோர் கலந்து கொண்டு காந்தியடிகளின் புகழுரையும் இன்றைய தேவைகளையும் வலியுறுத்தினார்கள் திருச்சி மாவட்ட மாதர் சங்க தோழர் ரேணுகாதேவி கலந்து கொண்டு காந்தியின் போராட்டத்தையும் உண்மையான சுதந்திர போராட்ட தியாகங்களையும் நினைவுப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து தோழர் கிருஷ்ணமூர்த்தி பேபி நிர்மலா ஆகியோர் காந்தியின் நினைவுகளை போற்றும் வகையில் பாடல்களையும் தோழர் ராஜேந்திரன் அமல்ராஜ் தமிழ் வாழ்த்து பாடலையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடினர்.
பாலாஜி நகரில் முன்னால் சங்கத்தலைவர் நாராயணசாமி தலைமையிலும் சக்தி நகரில் தோழர் பூமிநாதன், கவிஞர் பாரத் மனோகர், தலைமையிலும் காட்டூர் பகுதியில் தோழர் ராதா கிருஷ்ணன் உட்பட பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் காந்தியின் நினைவுகள் கொள்கைகள் போராட்டங்கள் ஆகியவற்றை போற்றும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது கவிதை வாசிப்பும் விழிப்புணர்வு கோஷங்களும் எழுப்பப்பட்டது.