தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை கருத்தரங்கம் !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை கருத்தரங்கம் நடைபெற்றது
துணைவேந்தர் பங்கேற்பு

தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை சார்பில் ‘உள்ளூர் வரலாறும் வழக்காறுகளும்’ எனும் சிறப்புக் கருத்தரங்கம் 04.10.2023 அன்று நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் தலைமை தாங்கினார். அவர் தம் உரையில், ‘இதுபோன்ற கருத்தரங்குகள் தமிழர் வாழ்வை, வரலாற்றை, பண்பாட்டை அறிய உதவும்’ என்றார்.

பதிவாளர்(பொ) முனைவர் சி. தியாகராசன், மொழிப்புலத்தலைவர் முனைவர் ச. கவிதா, நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. காமராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசினார் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஜான் பீட்டர் ‘ஊர்ப் பெயர் ஆய்வு – வரலாற்றுப் பின்புலம்’ எனும் தலைப்பிலும், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ச. இரவி ‘வட்டார வரலாறும் வழக்காறும்’ எனும் தலைப்பிலும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரிப் பேராசிரியர் கா. கந்தசுப்பிரமணியம் ‘வழக்காறுகளும் வாழ்விட வரலாற்று எழுதியலும்’ எனும் தலைப்பிலும், சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் சி. முத்து கந்தன் ‘தெருக்கூத்து வரலாறு எழுத்தியல்’ எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.

நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சீமான் இளையராஜா வரவேற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் முனைவர் நா. மாலதி நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் தி. இரம்யா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.