காந்தி ஜெயந்தி – கோவில்பட்டி நகர் பகுதியில் இறைச்சி கடைகளில் விற்பனை ஜோர்!
காந்தி ஜெயந்தி அன்று தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இன்று ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.
ஆனால் கோவில்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி, இறைச்சி கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. மேலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமால் கண்டும் காணாமல் உள்ளனர் . இது பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
— மணிவண்ணன்