நாய்க்கும் பன்றிக்கும் கிடைக்கிற மரியாதையை விட குறைவு தான் -கடுமையாக விமர்சித்த ராமதாஸ் !
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜிகே மணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ்-கான முக்கியத்துவம் கொடுத்து, கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைப் பற்றிய அறிவிப்பை ராமதாஸ் அறிவிக்கவில்லை.
ஆனாலும் அன்புமணியை முன்னிலைப்படுத்தியே தனது உரையை தொடங்கிய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ் கூறியது,
2021- க்கு விடை கொடுப்போம்.!!
2022 ஐ வரவேற்போம்.!!
2021 சட்டமன்ற தேர்தலில் பாமக எதிர் பார்த்து இடங்களில் வெற்றி பெற முடியவில்லை, ஆனால் 2026 நம் ஆளும் கட்சியாக உருவெடுக்க வேண்டும்.
இனி கூட்டணி என்றால் பாமக தலைமையில் தான் அமைய வேண்டும். எல்லோரும் அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் மாற்றமே கிடையாது, இனி பாமக தான் தலைமை பொறுப்பை வகிக்கும், 2026ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக பாமகவை மாற்ற நிர்வாகிகள் சுறுசுறுப்பு காட்ட வேண்டும்.
மேலும் வரக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் சமரசம் செய்துகொள்ளும் பாமக நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கடுமையான பின்விளைவுகளை அனுபவிப்பார்கள், நாங்கள் வைத்திருக்கக்கூடிய உளவுத்துறை அவர்களைப் பற்றிய முழுத் தகவலையும் கூறிவிடும். இனி தவறு செய்தவர்களை மன்னிப்பதற்கு வாய்ப்பே இல்லை, யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை தான்.
கேவலம் பைசாவுக்காக ஆசைப்பட்டு ஒன்று, இரண்டு பேர் இருவேறு கட்சிக்கும் ஓடுகிறார்கள். போனவர்கள் அன்று மட்டும் கொண்டாடுவார்கள், பிறகு ஓரம் கட்டப் படுவார்கள், மானம் உள்ளவர்கள் மட்டும் இங்கு இருங்கள், எலும்புத்துண்டு ஆசைப்பட்டு ஓடுகிறவன் ஓடட்டும். அவனுக்கு கிடைக்கிற மரியாதை நாய்க்கும், பன்றிக்கும் கிடைக்கிற மரியாதை விடை குறைவுதான்.
குறைந்தது 60 லிருந்து 70 தொகுதிகளை பெற்று சட்டமன்ற தேர்தலில் வெல்ல வேண்டும் அதற்காக தொண்டர்கள் செயல்பட வேண்டும். அன்புமணியை முதலமைச்சராக நிர்வாகிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும். இதற்காக பத்து மடங்கு, நூறு மடங்கு உழைக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும். என்று கூறினார்.