தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைத்த மதுரை ஜல்சா பெண்கள் !
தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைக்கும் மதுரையில் ஜல்சா பெண்கள் ! மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கள்ளத்தொடர்பு பாணியிலான குற்றங்களின் வரிசையில் தற்போது விபச்சார வழக்கும் சேர்ந்திருக்கிறது.
குறிப்பாக, மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்களுக்கான அழகு நிலையம் என்ற பெயரில் செயல்படும் ஸ்பாக்களில் இத்தகைய கூத்துக்கள் நடைபெறுவதாக மதுரை கமிஷனருக்கு ரகசிய தகவல் பறந்திருக்கிறது.
கமிஷனர் லோகநாதன் ஐ.பி.எஸ்., விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையில் அதிரடி ஆய்வுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அதிரடி ஆய்வில் குறிப்பிட்ட ஸ்பாவில் இருந்து மேலாளர் பிரகாஷ்ராஜ் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக மணிப்பூர், நாகலாந்தை சேர்ந்த பெண்கள் சிலரையும் கொத்தாக தூக்கி வந்திருக்கிறார்கள்.
எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறைக்கு அனுப்பி வைத்த ஆய்வாளர் ஹேமா மாலாவை நேரில் சந்தித்தோம்.
“ஆறு மாதங்களுக்கு முன்பாக, இதே விபச்சார தடுப்புப் பிரிவில் நான் பணியாற்றியபோது, மதுரையில் விபச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக மாறுதலாகி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிடமாற்றத்தில் சென்றிருந்தேன். இந்த இடைவெளியில், சலூன் கடை என்ற பெயரில் ஸ்பா – வை திறந்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
தற்போது, நான் திரும்பவும் மதுரை மாநகருக்குள் வந்துவிட்டேன் என்று தெரிந்தவுடன் தலை தெறிக்க ஓடுகிறார்கள். மகளிர் அழகு நிலையம் என்ற பெயரில் மதுரையில் பல இடங்களில் விபச்சாரங்கள் நடப்பதாக எங்களுக்கும் தகவல் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்களும் அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த குறிப்பான வழக்கைப் பொறுத்தவரையில், கமிஷனர் உத்தரவின்படி, அதிரடி சோதனைக்கு சென்றோம். எம்.காம். பட்டதாரியான பிரகாஷ்ராஜ் என்பவர் மேனேஜராக இருந்து கொண்டு, மணிப்பூர், சிக்கிம் போன்ற வடமாநிலங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருப்பதை உறுதி செய்தோம்.
இந்த அழகு நிலையத்தை நடத்துபவர் கேட்டரிங் கல்லூரி வைத்துள்ளாராம். அவனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பெண்களிடம், நான் மனிதாபிமான அடிப்படையில் இந்தத் தொழிலில் ஈடுபடாதீர்கள. நீதிபதிகளிடம் உங்களது நிலையை எடுத்துக்கூறி உங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று அறிவுரை வழங்கினேன்.
”சொந்த ஊரில் ஒரு நாளைக்கு கல் உடைத்தாலும் சரி; கடுமையான வேலை பார்த்தாலும் நாளொன்றுக்கு முன்னூறு ரூபாயும் சப்பாத்தி குருமாவும்தான் கிடைக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டாலும், தினமும் மூவாயிரம் கிடைக்கிறது. அரசி சாதமும் இறைச்சியுமாக சாப்பிட முடிகிறது.
நீங்கள் எங்களை ஊருக்கு அனுப்பினாலும், ஒரு வாரமோ, ஒரு மாதமோ கழித்து திரும்பவும் இங்கே வருவதைத்தவிர வேறு வழியில்லை.” என்று என்னிடமே கூறுகிறார்கள். இவர்களையெல்லாம் கடவுள்தான் காப்பாத்த வேண்டும்” என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக வேதனைப்படுகிறார் ஆய்வாளர் ஹேமாமாலா.
அதேசமயம், இதுபோன்ற பெண்களை வைத்து விபச்சாரத்தில் யார் ஈடுபடுத்தினாலும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கிறார். ரஜினி பாணியில் விபச்சாரத்தடுப்புப்பிரிவுக்கே மீண்டும் ”திரும்ப வந்துட்டேனு சொல்லு” எனசவால் விடுக்கிறார், இன்ஸ் ஹேமா மாலா!
ஷாகுல் படங்கள்: ஆனந்தன்