கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் !
பட்டா மாற்ற ரெண்டாயிரம் ரெடி பண்ணிட்டு வா … கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் !
பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியரிடமே ரூபாய் ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளகொட்டாம்புளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மின் வாரிய ஊழியர் சுதாகர். சுதாகருக்கு சொந்தமான, 10 சென்ட் விவசாய நிலம், அவரின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த காவிய தர்ஷினி பெயரில், வருவாய் துறை ஆவணங்களில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்ததை தனது பெயருக்கு மாற்றம் செய்து பட்டா வழங்கக்கோரி,விவசாய குறைதீர் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை சுதாகர் மனு அளித்திருந்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டதன்பேரில் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு சுதாகருக்கு பட்டா மாறுதல் செய்ய பரிந்துரைத்தார். இந்நிலையில், கடந்த, 28- ந் தேதி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் பெற ஆன்லைன் மூலம் சுதாகர் விண்ணப்பித்தார்.
இதற்காக குருபரஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அரூர் பே.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கதிரவன், என்பவரை அணுகியுள்ளார். அதற்கான ஆவணங்கள் பெற வேண்டும் என்றால் ”ரூபாய் இரண்டாயிரம் ரெடி செஞ்சுக்கிட்டு வாங்க இல்லையென்றால், மனுவை ஏற்காமல் நிராகரித்து விடுவேன்” என தெரிவித்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர், அதற்கு உடன்படாமல் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காவல் ஆய்வாளர் பெருமாள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்களை கதிரவனிடம் கொடுத்து அதை விஏஓ கதிரவனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர்.
அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்குட்டபட்ட தென்கரைக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் சுதாகர் என்பவரிடம் ரூபாய் ஆயிரம் , லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கதிரவனை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தென்கரைக்கோட்டை வருவாய் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
தவறுதலாக பட்டா பெயர் மாற்றம் ஆனதை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய , மின் ஊழியரிடம் லஞ்சம் கேட்ட வழக்கில் வி.ஏ.ஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
– மணிகண்டன்.கா
லஞ்சம் கேட்டு துன்புறுத்தும் அதிகாரிகள் நல்ல மனிதர் ஆகவேண்டும். திருந்த வில்லையானால் கைது செய்யப்பட்டு செய்தி வெளியிட வேண்டும்.
லஞ்சம் கேட்டு துன்புறுத்தும் அதிகாரிகள் மனம் மாறவேண்டும். லஞ்ச குற்றவாளிகளின் பெயர் பட்டியல் அரசு வெளியிட வேண்டும். அவர்களின் ஊழியர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும்
I do not support bribery. But TNEB personnel are more corrupt than Revenue dept personnel. These TNEB bastards take bribe for doing anything, be it to change pole connection, meter shifting, fuse change, name change of connection. It is surprising one black fellow another dark.
புகார் செய்த மின் ஊஷியர் பணிபுரியும் துறையிலும் இதே நிலை தான். லஞ்சம் கொடுக் காமல் மின் இணைப்பு பெற்ற 4 நபர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா?