அங்குசம் சேனலில் இணைய

சுடுகாடு சாலையைக் கடந்த அமானுஷ்ய உருவம்? வீடியோ எடுத்த வாலிபருக்கு திடீர் காய்ச்சல் !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சுடுகாடு சாலையைக் கடந்த அமானுஷ்ய உருவம்?
வீடியோ எடுத்த வாலிபருக்கு திடிர் காய்ச்சல் !!

திருப்பத்தூர் அருகே நேற்று இரவு தனியாக சென்ற வாலிபர் ஒருவர் அமானுஷ்ய உருவத்தை பார்த்து  அதிர்ச்சி அடைந்தவர் . அந்த மர்ம உருவத்தை செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய நிலையில் தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர். ஒருவர்  நேற்று இரவு 10 மணி அளவில் பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். சுண்ணாம்புக்குட்டை  அருகே உள்ள சுடுகாடு ஒட்டிய புளியமர தோப்பை அவர் கடந்த பொழுது திடீரென ஒரு மர்ம உருவம் அந்த சாலையை கடந்துள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதனால் நிலைகுலைந்த வாலிபர் தனது வண்டியை  நிறுத்திவிட்டு செல்போனில் அந்த உருவத்தை வீடியோவாக எடுத்துள்ளார் அந்த உருவம் உடல் முழுவதும் நீளமான முடியுடன் பெரிய விரல்களுடன்  உயரமான தோற்றத்தில் இருந்துள்ளது. மேலும் மெதுவாக சாலையைக் கடந்து புளிய மரத்தின் அருகே சென்றதும் மறைந்து விட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனால் பயந்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் அந்த வழியாக செல்ல அச்சமடைந்து திரும்பி மாற்று பாதையில் தனது வீட்டை அடைந்துள்ளார். பேயை பார்த்ததாக தனது குடும்பத்தாரிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் கூறியுள்ளார். பயந்து போனதில் அந்த வாலிபர் காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இது போலி வீடியோ என்று சிலர் கூறுகிறார்கள். இதன் உண்மை தன்மை பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை.

பேய் பிடித்தல் என்ற நிலையை மருத்துவ உலகம் எப்படி பார்க்கிறது   இது முழுக்க முழுக்க மனநலம் சார்ந்த பிரச்னையாகவே மருத்துவத்துறை கருதுகிறது. ஒரு மனிதரின் உடலும் மனமும் ஒத்து செயல்படுவதே இயல்பாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இயல்புக்கு மாறாக ஒருவர் செயல்படுவதை மருத்துவத்துறையில் ஆளுமைச் சிதைவு (Dissociation) என்கிறோம். இதையே சமூகத்தின் சில அங்கத்தினர் பேய் பிடித்தல் என்று அழைக்கப்படுகிறார்கள்.

-மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.