பிஜேபி நடைபயணத்தில் அனுமதி இன்றி ராட்சத கொடிக்கம்பங்கள் ! கலீல் தலையில் 15 தையல்கள் ! வீடியோ
அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தில் திருப்பத்தூர் – புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், சுமார் 50 உயர ராட்சத இரும்புக் கொடிக்கம்பம் சாய்ந்தது. இதில், புதுப்பேட்டையைச் சேர்ந்த கலீல் என்பவர் தலையில் விழுந்ததில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலீலுக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை வருகையை ஒட்டி திருப்பத்தூரில் பாஜகவினர் அனுமதியின்றி ஏராளமான இடங்களில் ராட்சத கொடிக் கம்பங்களை அமைத்ததாகவும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
– மணிகண்டன்
வீடியோ லிங்