கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காதே ! முப்பருவ தேர்வு முறையைக் கைவிடு !

0

கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காதே ! முப்பருவ தேர்வு முறையைக் கைவிடு ! கல்வி மாநாட்டில் கவனத்தை ஈர்த்த தீர்மானங்கள் !

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி

https://businesstrichy.com/the-royal-mahal/

”இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், ஆன்லைன் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பு, எமிஸ் அப்டேட்ஸ் , வானவில்மன்ற செயல்பாடுகள், நான் முதல்வன் திட்டச் செயல்பாடுகள் போன்றவற்றை நிறுத்தி பள்ளிக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் (AISEC) தமிழ்நாடு மாநில அமைப்பினர்.

இவ்வமைப்பின் சார்பில், பொதுக் கல்வி அமைப்பை பாதுகாக்கக் கோரி, பொதுக் கல்வி பாதுகாப்பு மாநில மாநாடு சென்னை பத்திரிக்கை நிருபர்கள் கில்ட்-யில் கடந்த ஜனவரி 27, 2024 அன்று நடைபெற்றது. மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற இம்மாநாட்டில் திருமதி சு. உமா மகேஸ்வரி, AISEC, தமிழ்நாடு மாநிலத் தயாரிப்புகுழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி

மாநாட்டில் பேரா அ.கருணானந்தன், மேனாள் துறைத் தலைவர், வரலாற்றுத்துறை விவேகானந்தா கல்லூரி, பேரா லெ.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே எஸ் எஸ் பல்கலைக்கழகம், பேரா ப.சிவக்குமார், மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி, பேரா. பிரான்சிஸ் கலோத்துங்கல், AISEC, அகில இந்திய செயற்குழு உறுப்பினர், கேரளா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், திருமதி மணிமேகலை, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பேரா பி.கே.அப்துல் ரஹிமான், சென்னை பல்கலைகழகம், திரு பழ.கௌதமன், மாநிலத் தலைவர் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம், திரு கே.பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM), திரு எம்.ஜே.வால்டேர், மாநிலத் தலைவர், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், தமிழ்நாடு, திரு வி.பி. நந்தகுமார், AISEC, அகில இந்திய செயற்குழு உறுப்பினர், பேரா க.யோகராஜன், AISEC, மாநிலத் தயாரிப்புகுழு, தமிழ்நாடு ஆகியோரும் உரையாற்றினர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கூட்டத்தில் திரு க. யோகராஜன், AISEC, மாநிலத் தயாரிப்புகுழு, தமிழ்நாடு நன்றியுரை ஆற்றினார். திரு சீ ஹோ திலகர் மாநிலத் தலைவராகவும், திரு க யோகராஜன் மாநிலச் செயலாளராகவும் கொண்ட புதிய மாநிலக் குழு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதனைத்தொடர்ந்து, இம்மாநாட்டில், “கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்; தொடக்கக் கல்விலிருந்து உயர்கல்வி வரை தாய்மொழியில் போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மொழி கொள்கையை தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்விவரை பின்பற்ற வேண்டும்;

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி

தூய்மைப் பணியாளர்களை பள்ளிகளுக்கு நிரந்தரமாக நியமிக்க வேண்டும்; முப்பருவக் கல்வி முறையை மாற்றி வருடம் முழுவதும் படிக்கும் ஒரே பருவ முறையைக் கொண்டு வர வேண்டும்; கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்; ஓராசிரியர் பள்ளிகளை மாற்றி வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்; தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஒன்றிய அரசால் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்த முனையும் கிரெடிட் வங்கி பாடத்திட்டம் (Academic Bank of Credit – ABC) திட்டத்தை கைவிட வேண்டும்;

செனட், சிண்டிகேட் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழுக்களில் ஜனநாயக முறையில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும்;

மதசார்பற்ற, ஜனநாயகபூர்வ, அறிவியல்பூர்வ கல்வியை அனைவருக்கும் வழங்கும் மக்களுக்கான மாற்று கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை இம்மாநாட்டில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப் பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.