அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹீரோ, ஹீரோயினைத்தாண்டி, அந்தப்படத்துல இருக்குற துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே மனசுல….

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒரு படம் பார்த்து முடிச்ச அப்புறம் ஹீரோ, ஹீரோயினைத்தாண்டி, அந்தப்படத்துல இருக்குற துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே மனசுல பதிஞ்சு போற அளவுக்கு அட்டகாசமான கேரக்டர் ஆர்டிஸ்ட்ஸ் இந்த படத்துல இருக்காங்க.

இந்தப் படத்தோட ஹீரோ யாருன்னு கேட்டா கண்ணை மூடிகிட்டு பசுபதி அப்படின்னு சொல்லிடலாம். அந்த மனுஷன் எந்த கேரக்டரைத்தான் பிச்சு உதறல?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சார்பட்டா பரம்பரை’ல இருக்க வாத்தியார் கேரக்டர் ஆகட்டும், இப்ப பைசன்’ல அவர் பண்ணியிருக்கிற அந்த அப்பா கேரக்டர் ஆகட்டும், எல்லாமே அல்டிமேட்…

இதுல அவரோட கண்ணுல தெரியுற ஏக்கம், கோபம், இயலாமை, பரிதவிப்பு, லட்சியம், வெறி, கனவு’ன்னு எல்லாத்தையும் சீனுக்கு சீன்… சீனுக்கு சீன் மனுஷன் பின்னி பெடல் எடுத்திருக்காரு… அதுவும் அந்த சகதிக்குள்ள போலீஸ்கிட்ட கெஞ்சுற சீன்ல’லாம்… நான் மெரண்டுட்டேன்…, ப்பா… மனுஷன் கலக்கியிருக்காரு..

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதே மாதிரி ஹீரோவோட அக்காவா வர்ற ரஜிஷா விஜயன்.. அடேங்கப்பா.. அவங்க தம்பி இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆயிட்டான்ன உடனே அவனை திட்டுற சீன்ல செமையா ஸ்கோர் பண்ணி இருந்தாங்க..ஒரு ஹீரோயினை படம் முழுக்க அக்கா கேரக்டர்ல நடிக்க கேட்டா, எந்த ஹீரோயினும் ஒத்துக்க மாட்டாங்க ஆனா ரஜிஷா அதை எல்லாம் யோசிக்காம கேரக்டரை மட்டும் உள்வாங்கி செம சூப்பரா பண்ணி இருந்தாங்க..

அனுபமா மட்டும் என்னவாம்… தன்னைவிட வயசுல சின்ன பையனை லவ் பண்றோம் அப்படிங்கற விஷயத்தை கண்ணுலையே சொல்றதாகட்டும், வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கும் போது அந்த பட்டுப்புடவையோட ஓடி வந்து பசுபதிகிட்ட கத்துற சீன் ஆகட்டும், தரமா பண்ணியிருந்தாங்க..

அனுபமா’க்கு தாலி எடுத்து கொடுத்து கல்யாணம் பண்ற சீன்ல அனுபமாவோட அம்மாவும், அமீரும் கலக்கி இருப்பாங்க.. அதுலயும் அந்த இடத்துல அமீர், அனுபமா அப்பாவை அடிச்சிட்டு சொல்லக்கூடிய டயலாக் அட்டகாசமா இருக்கும் . அந்த சீன் முடிச்ச அப்புறம் அமீர் கார்ல வரும்போது பேசற டயலாக்ஸ் இருக்குல்ல, அது இந்த சமூகத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான டயலாக்ஸ். The best Writing….

அதே மாதிரி துருவ்’வோட கோச்சா வர்ற மதன்குமார், அழகம்பெருமாள், அவரோட பொண்ணு, இந்தியன் டீம் கேப்டன்’ன்னு எல்லாருமே ஒண்டர்புல்லான ஆக்டிங்கை இந்த படத்துல கொடுத்திருந்தாங்க..

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதே மாதிரி வில்லன்களா வர்ற எல்லாருமே… குறிப்பா அந்த பஸ்ல ஆட்டை வெட்டுற நபர், அனுபமாவோட அப்பாவா வர்ற நபர், நடிகர் லால்’ன்னு எல்லாருமே… எல்லாருமே…. அசத்தலான பர்பாமென்ஸ்ஸை கொடுத்து இருக்காங்க. Kudos to them.

நான் சொன்ன அத்தனை துணை கதைபாத்திரங்களும் தாறுமாறா ஆக்ட் பண்ணி இருக்காங்க.. “என்னடா இப்படி ஒரு பர்பாமென்ஸ்ஸை கொடுத்துருக்காங்களே” அப்படின்னு நானே பல இடத்துல மிரண்டு போயிட்டேன்.. பஸ்ல ஆட்டை குறியீடா வெச்சி அந்த வில்லன் சண்டை போட வர, பசுபதி கொஞ்சம் கொஞ்சமா அதை அவாய்ட் பண்ண ட்ரை பண்றதும், மெதுவா அந்த டாபிக் உள்ள வலுக்கட்டாயமா போறதும், ஒரு கட்டத்துல Burst Out ஆகுறதுன்னு செம Staging and execution.

ஒருத்தரை விட ஒருத்தர்.. ஒருத்தரை விட ஒருத்தர் அப்படின்னு மாறி மாறி போட்டி போட்டு நடிச்சி, இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு போறது இவங்க அத்தனை பேரும்தான்.. சொல்லப்போனா இவங்க அத்தனை பேரும்தான் இந்த படத்தை தோள்ல தூக்கி சுமந்து இருக்காங்க..

ஒரு துணை கதாபாத்திரத்துக்கான ஆட்களை செலக்ட் பண்றதுல ஒரு டைரக்டருக்கு நிறைய சாய்ஸஸ் இருக்கும்.. பிரச்சனைகள் இருக்கும், இடையூறுகள் இருக்கும். சிக்கல்கள் இருக்கும். இவங்களைத்தான் போடணும்’ன்னு புரொடக்‌ஷன் சைட்ல இருந்து சில பிரஷர்ஸ் இருக்கும்..

ஆனா அது எல்லாத்தையும் மீறி அவங்களோட கதைக்கு பர்ஃபெக்ட்டான துணை கதாபாத்திரங்களை மட்டும் பக்காவா செலக்ட் பண்ணிட்டா, அந்த படம் ஒண்டர்ஃபுல்லா அமைஞ்சிரும்’ங்கிறதுக்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.

இந்தப் படம் ஏன் இவ்வளவு பாஸிட்டிவ் விமர்சனங்களால பாராட்டப்படுதுன்னா, அதுக்கு முக்கியமான காரணம், இந்த படத்துல அமைஞ்சிருக்க துணை கதாபாத்திரங்கள்தான்.. அந்த அளவுக்கு அவங்ககிட்ட ப்ரில்லியண்ட்டான ஒர்க்’கை வாங்கி இருக்கிற மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

படம் முடிஞ்ச அப்புறமும், பசுபதியோட அந்த ஆக்டிங் கண்ணுக்குள்ளேயே நிக்குது.. குறிப்பா.. தன்னுடைய மகன் அந்த அர்ஜுனா அவார்ட் வாங்குற காட்சியில அவர் கண்கலங்கி நெகிழ்ச்சியோட பேச வார்த்தையே இல்லாம அமர்ந்திருக்கிற அந்த காட்சி, இன்னமும் மனசை விட்டு போகல… பசுபதி சார் கலக்கிட்டீங்க….

2025’க்கான நேஷனல் அவார்ட் Best Supporting Actor / Actress Category’ல இந்தப்படம், ஒண்ணோ ரெண்டோ அடிக்க வாய்ப்பு இருக்கு…

—   ஆரவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.