“கல்வியின் மகத்துவத்தை பேசும் நல்ல படைப்பு சார் – திருமாவளவன் புகழாரம் !
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், படத்தைப் பார்த்துவிட்டு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும் போது
“நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அருமையான படைப்பு. கல்வியால் தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற படம் தான்’சார்’. கல்வி தான் உண்மையான வெளிச்சம், கல்வியால் சமூகம் விடுதலை பெறும் என்பதை, அடிப்படையாக கொண்டு போஸ் வெங்கட் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தில் ஒன்றிப்போய் அருமையாக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவரும் இணைந்து, கல்வியின் மகத்துவத்தை பேசும் மிகச்சிறந்த படமாக இப்படத்தை தந்துள்ளார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ” என்றார் .
– மதுரை மாறன்.