பயறு வகை சாகுபடி பரப்பை அதிகாிக்க அரசு நடவடிக்கை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துவரை, உளுந்து, பச்சை பயறு. தட்டை பயறு. கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பயறு வகை கள் தமிழகத்தில் சாகுபடி செய் யப்படுகின்றன. ஆண்டுதோறும் 20 லட்சம் ஏக்கரில், 5.22 லட்சம் டன் பயறு ரகங்கள் உற்பத்தியாகின்றன. ஆனாலும், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை.

எனவே, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ரேஷனில் மானிய விலையில் வழங்க, துவரம் பருப்பு ரகத்தைச் சேர்ந்த கனடியன் மஞ்சள் பருப்பு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தேவை அதிகம் உள்ள நிலையில், பயறு வகைகளை சாகுடி செய்தால், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும்.

மேலும், பயறு பயிர்கள், காற்றில் நைட்ரஜன் சத்துக்களை கிரகித்து, வேர்கள் வழியாக மண்ணின் வளத்தை பெருக்கவும் உதவுகின்றன. எனவே, பயறு உற்பத்தியை நடப்பாண்டு அதிகரிக்க, தமிழக அரசு வேளாண் துறை முடிவெடுத்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

பயறு வகைகள் பெருக்கு திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு 138 கோடி ரூபாய் செல விடப்பட்டது. இதன் வாயிலாக, 4.76 லட்சம் விவசாயிகள் பயன டைந்தனர். நடப்பாண்டு பயறு சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

துவரை சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், 10.80 கோடி ரூபாய் செலவில், மத்திய, மாநில அரசுகள் நிதியில் செயல் படுத்தப்பட உள்ளது.

எனவே, துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கத்திற்கு, 17.5 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. ஊட்டத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ். பயறு வகைகள் உற்பத்திக்கு, 353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு பின், பாசன பற்றாக்குறை உள்ள நிலங்களில், பயறு பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க, 3.35 கோடி ரூபாய் கா தரப்பட்டுள்ள இவற்றில் பயறு சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என. எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.