கல்லூரி ஆசிரியர் சங்கத்திற்கு அகில இந்திய துணைத் தலைவராக திருச்சி பேராசிரியர் தேர்வு !
கல்லூரி ஆசிரியர் சங்கத்திற்கு அகில இந்திய துணைத் தலைவராக திருச்சி பேராசிரியர் தேர்வு!
திருவெறும்பூர் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கல்லூரி ஆசிரியர் சங்கத்திற்கு அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு திருவெறும்பூர் ஜன 24 அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் கான்பூரில் நடந்த 33வது மாநாட்டில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு பெற்றுள்ளார். அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் உத்தரபிரதேச மாநில த்தில் 33 வது மாநாடு மற்றும் கருத்தரங்கு 3 நாள் நடந்தது.
இதில் கூட்டமைப்பின் சார்பாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அனைத்து தலைமை பொறுப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.அதில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடிமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியரும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு
அக் கூட்டத்திலேயே அவர் தேசியத் துணைத் தலைவராக பதவி ஏற்று கொண்டார்.
இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் கூறுகையில் இது துவாக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை ஆகும். இவ்வாறு கூறினர். இதனை எடுத்து கல்லூரி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.