அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர் தம்பதியினர்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வேதாரண்யம், முதலியார்குத்தகை கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான மயானம் மற்றும் மயானப்பாதை என்ற சுடுகாட்டு நிலத்தை அரசுப்பள்ளி ஆசிரியர்களாக பணிபுரியும் தம்பதியினர் ஆக்கிரமித்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றஞ்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அதே ஊரைச் சேர்ந்த கோ. செல்லத்துரை என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள் வருவாய்த்துறையினர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக செல்லத்துரையிடம் பேசினோம். “ இருபது வருடங்களாக அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் அ. இரவிச்சந்திரன் – ர.சாந்தி தம்பதியினர், முதலியார்குத்தகை கிராமத்தில் புல எண் 190/3ல் சுமார் 27 ஏர்ஸ் பரப்பளவுள்ள மயானம் மற்றும் மயானப்பாதையை ஆக்கிரித்துள்ளனர்.

ஒரே வீட்டுக்கு  வீட்டு வரிவிதிப்பு எண்கள்: 235, 234 ஆகிய இரண்டு வீட்டு வரி ரசீதுகளை முறைகேடாக பெற்றிருக்கிறார்கள். மயானப் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கவோ வீடுகட்டவோ வருவாய்த்துறை விதிகளில் இட மில்லை என்ற நிலையில் இவர்கள் எப்படி வீடு கட்டினார்கள்? அதுவும் ஒரே வீட்டுக்கு இரண்டு வீட்டு வரி ரசீதுகளை எப்படி பெற்றார்கள்? மின் இணைப்பை எதன் அடிப்படையில் வழங்கினார்கள்?

யாவரும் கேளீர்

ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள். மேலும், குளம் அமைத்து மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வருக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறையினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரித்தார்கள்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

விசாரணையில், அவர்கள் கட்டியிருக்கும் வீடு திருவையாறு கோயிலுக்கு சொந்தமானது என்பது முதற்கட்டமாக தெரிய வந்திருக்கிறது. வீட்டு வரி ரசீது போட்டது தவறு என்றும் அதனை உடனடியாக ரத்து செய்வதாகவும் பி.டி.ஓ. சொல்லியிருக்கிறார். வீடு கோயில்  நிலத்தில் இருக்கிறது என்றாலும், மயான இடத்தில்தான் தென்னை வளர்த்து வருகிறார். மீன் குளம் அமைத்திருக்கிறார். இதனை மீட்டெடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.” என்கிறார், அவர்.

இதுதொடர்பாக, வேதாரண்யம் தாசில்தாரிடம் பேசினோம். “புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக விசாரித்திருக்கிறோம். கிராம கணக்குகளை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தரப்பில் மூல பத்திரங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக அடுத்த விசாரணைக்கு அவகாசம் வழங்கியிருக்கிறோம். விசாரணையின் இறுதியில்தான், ஆக்கிரமிப்பா? இல்லையா? என்பது தெரியவரும்.” என்கிறார்.

ஆக்கிரமித்ததாக சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆசிரியர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். “இந்த இடம் எனது மாமனார் கிரையம் செய்தது. இப்போதுதான், இந்த இடத்தில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதே எங்களுக்கு தெரிந்தது. உழைச்ச காசை போட்டு இப்படி ஒரு இடத்தை வாங்கிவிட்டோமே என்று மன உளைச்சலில் இருக்கிறோம். இப்போது எங்களுக்கு எதிராக புகார் கொடுத்திருக்கும் செல்லதுதுரை எனக்கு சித்தப்பாதான். பங்காளிகளுக்கிடையே சொத்து பிரச்சினை இருக்கிறது. அதில் என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார்.” என்றவரிடம், அ-பதிவேட்டில் அரசு புறம்போக்கு என்றுதானே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி கேட்டதற்கு, “எங்களிடம் கிரைய ஆவணம் இருக்கிறது. ஒருவேளை இது புறம்போக்கு என்று சொன்னால். நாங்கள் என்ன செய்ய முடியும். அரசிடமே கொடுத்துவிடுவோம்.” என்றார்.

முதற்கட்ட பார்வைக்கே, வருவாய்த்துறையினரின் அ-பதிவேடுகளில் அரசு புறம்போக்கு என்று தெளிவாக உள்ள நிலையில், எப்படி வீடு கட்டவும், தென்னந்தோப்பு அமைக்கவும் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. வருவாய்த்துறையினரின் கறாரான நடவடிக்கையை எதிர்நோக்கியிருக்கிறது, இந்த விவகாரம்.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.