செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாராத இயக்கத்தின் 2.0 கீழ் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குடியரசு தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச  உன்னத பாரத இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டோம்னிக் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனை படி குடியரசு தின விழா அன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாராத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகமங்கலம்  சேதுராப்பட்டியிலுள்ள சூராவளிப்பட்டி இனாம்மாத்தூர் அளுந்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது .

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ஒருங்கிணைப்பாளர் லெனின் இனாம்மாத்தூரில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி நடத்தப்படுவது பற்றியும்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ்  சிறுகாற்றாலை யாகப்புடையான் பட்டியில் உள்ள அரசப்பள்ளியில் நிறுவப்படுவது பற்றியும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒருங்கிணைப்பாளர் யசோதை நாகமங்கலத்தில் மத்திய அரசின் காப்பீடு திட்டங்கள் பற்றியும், சேதுராப்பட்டியில் குளம் தூர்வாரும் பணிகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல அலுவலர் கிராம நிர்வா அலுவலர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் கிராம பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

குடியாரசு தினவிழாவை முன்னிட்டு மேற்கொண்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய அரசமைப்பு சாசனம் மற்றும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

 

—  அங்குசம் செய்திகள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.