வேங்கைவயல் விவகாரம் … நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல் … வெளியான ஆடியோ … என்னதான் நடந்தது?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரி ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து அவரும் விசாரணை அறிக்கையை  சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்கறிஞர்களான கே. ராஜ்குமார், மார்க்ஸ் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலவழக்கு  நீதிபதிகள் கே.ஆர். ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

வழக்கு விசாரணையின்போது, பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், வழக்கு நடைபெற்று வரும் புதுக்கோட்டை  வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி அன்றே நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்டு, வெளியிட்ட தகவல்தான் தற்போது தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேங்கைவயல் விவகாரம்
வேங்கைவயல் விவகாரம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சிபிசிஐடி போலீசார் விசாரணையில் திருப்தியில்லை; பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கியிருக்கிறது; தனிநபர்களுக்கிடையிலான முன்பகைதான் காரணம் என்றும் குறிப்பிட்டு வழக்கை திசை திருப்பிவிட்டது என்பதாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்று முதல் இன்று வரையில் நடந்தது என்ன? என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய Cr.No.239/2022-ல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வேங்கைவயல் விவகாரம் இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் 626060060L 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

வேங்கைவயல் விவகாரம் மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

* இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துக்கள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு () திரு. முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) திரு. சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (i) திரு. முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்பதாக, தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மிக முக்கியமாக, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரின் கைப்பேசியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள், வீடியோ பதிவுகள், உறவினர்களுடன் அவர்கள் பேசிய கால்ரெக்கார்டு ஆகியவை அடுத்தடுத்து முன்னணி செய்தி ஊடகங்களில் வெளியாகியிருப்பதும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

 

—    அங்குசம் செய்திப்பிரிவு.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.