அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Grand Chola Talent Fest 2026 : கலை, திறமை, சமூக அங்கீகாரம், தொழில்முனைவு ஒரே மேடையில் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்தியாவின் VV Entertainments மற்றும் அமெரிக்காவின் DARS Entertainment இணைந்து, நடிகர் விஜய் விஷ்வா தலைமையில் Grand Chola Talent Fest 2026 என்ற பிரம்மாண்ட கலை மற்றும் திறமைகள் திருவிழா, ஜூன்-28 அன்று திருச்சி மொரைஸ் சிட்டியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் கில்ட் சங்க தலைவர் ஜாகுவார் தங்கம், யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் திரைப்பட இயக்குநர் ஜவஹர் மித்ரன், விலங்கு மற்றும் மாமன் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் ரேமா அசோக், ஷாலினி, அஷ்வினி, திரைப்பட தயாரிப்பாளர் மனோ கிரியேஷன்ஸ் ராஜா, லேடர் ப்ரோடுக்ஷன் இன் செழியன் குமாரசாமி தில்லியை சேர்ந்த முக்கிய பிரமுகர் சசி உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மேலும், விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சமூகப் போராளி ஐயாகண்ணு அவர்களுக்கும், திரையுலகில் கலை பங்காற்றியதற்காக  திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் கில்ட் சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Grand Chola Talent Fest 2026இதனைத் தொடர்ந்து, Honey Cola நிறுவனத்தின் கோலி சோடா பானம் அறிமுக விழா கோலாகலமாக திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

மேலும், லேடர் நிறுவனத்தின் தயாரிப்பு ஸ்ரீகாந்த் தேவா இசையில் தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பில் நடிகர் விஜய் விஷ்வா அவர்கள் நடித்த வள்ளுவம் என்கின்ற ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா சசி அவர்களால் வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிகழ்விற்கு Trichy Super Stockist சுமித்ரா (Sri Sai Group of Companies Founder), Honey Cola Founder Josephine, Isha Homes, Roopaiapex Nidhi Limited Founder துரைசிங்கம், De Shyra Skinz, Wonder Diamonds, Dhiya Family Salon & Academy ஆகியோர் ஆதரவு வழங்கினர்.

மேலும், Be Well Ads மற்றும் D2B ஆகியோர் Supporting Partners ஆகவும், Amar Photography, Lunar Lens Studio, NJ Studio ஆகியோர் Coverage Partners ஆகவும், Energy Food (Return Gift Partner), National Kitchen, Rudharun Arts, Angusam, DJ Benlee, Aaha Bhavan, Ramya Hotel, Ramani Ventures உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் பங்குதாரர்களாக இணைந்து நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

Grand Chola Talent Fest 2026விழாவில் Short Film Contest, Makeup Competition, Fashion Walk, Kids Talent Show, Namma Ooru Vibes என்ற நேரலை இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சமூகத்திலும் தொழில்துறையிலும் சாதனையாளர்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

கலை, திறமை, சமூக அங்கீகாரம் மற்றும் தொழில்முனைவை ஒரே மேடையில் இணைத்த Grand Chola Talent Fest 2026, திருச்சியில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.

–              அங்குசம் செய்திப்பிரிவு

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.