சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் “பசுமைப் பயணம் – மிதிவண்டி பேரணி”
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றிய ம் நாகமங்கலம் கிராமத்தில், திருச்சி மறை மாவட்ட திருச்சி துறவியர் பேரவை முன்னெடுத்த இயற்கையை பாதுகாக்க, மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நோக்கில் பசுமைப் பயணம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் என சிறப்பாக தொடங்கி நடத்தப்பட்டது.
முன்னதாக AICUF குழுவினர் பசுமைப் பயணம் மேற்கொண்டுள்ள குழுவினர் 5 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் 20 ஆம் தேதி நிறைவு செய்கிறார்கள். 11. 11. 2025, நாகமங்கலம் இறையிறக்க ஆண்டவர் ஆலய வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்டு கொண்ட இளைஞர்கள் முன்னதாக திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அம்சம் அருங்கொடை இல்லத்தில், கல்வி நிறுவன வளாகத்தில் மரங்களை நட்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வீதிக நாடகத்தை நடத்தி தொடர்ந்து சைக்கிள் பேரணியாக நாகமங்கலம் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு பாரம்பரிய இசையான பறை இசையின் மூலமாக சிறப்பான வரவேற்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ச. ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமை தாங்கி ஆசியுரையையும் வழங்கினார். “படைப்பதை பாதுகாப்பதே” நம் நோக்கம் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செல்வி. சேஷத்திரி மையும் தீ பி சா னு , ஐஏஎஸ், திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி ) கலந்து கொண்டார். அவர் தமது சிறப்புரையில் நாம் ஒவ்வொருவரும் மரங்களை, இயற்கையை, மனிதர்கள் போல பாவித்து பேணி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறப்பு பேச்சாளராக திருமதி. மா. தமிழரசி ஆசிரியை (ஓய்வு), லால்குடி . கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தமது சிறப்பாக உரையில் இயற்கையும், மரங்களும் மனிதர்களின் வாழ்வியலோடு இணைந்தது மரங்களின் மூலமாகத்தான் நமக்கு உணவு உடை ,மருந்து என வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் வந்து சேர்கின்றன இயற்கையும் மரங்களும் இல்லையேல் மனிதர்கள் இல்லை உயிரினங்கள் இல்லை அதனைப் பேணி பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சைக்கிள் பேரணியாக வந்த இளைஞர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வீதி நாடகத்தை சிறப்பாக நடத்திக் காட்டினர். DONBOSCO MEDIA மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகத்தை சிறப்பாக நடத்தினர். புனித அன்னாள் சபை மாணவ மாணவியர்களின் கலை நடனத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக நடனத்தை வழங்கினர். சலேசியன் அருட் சகோதரிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களை பாடினர். இயற்கையை போற்றும் விதமாக இறைவணக்க பாடல்களை புனித சிலுவை அருட் சகோதரிகள் வழிநடத்தினர்.
அருட்தந்தை சார்லஸ் SDB, அனைவரையும் வரவேற்றார், அருட் சகோதரி Princilin SCG, அனைவருக்கும் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியினை அருட்தந்தை ஜான் கென்னடி, அம்சம், அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் SDB, அருட்தந்தை சார்லஸ், தலைவர், CRI, அருட்தந்தை T. சகாயராஜ் SJ, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை இயக்குனர், Bro . ஜான் பால் ,Sr. டெய்ஸி MSSM, Fr. அருள் ஆண்டனி, SDB,Bro. பிரிட்டோ, CG அருட்தந்தை. Barnabas, Sr. டெய்ஸி, அருட்தந்தை அருள் ஆண்டனி, SDB, அருட் சகோதரி நம்பிக்கை மேரி , சகோதரி லில்லி ஆகிய துறவர பேரவையின் பொறுப்பாளர்கள் சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்கள்.
இச்சுற்றுச்சூழல் செயல்பாட்டு ரீதியாக செயல்படுத்தும் விதமாக St ஜோசப் கல்லூரியின் விரிவாக்க துறை இயக்குனர் அருட்தந்தை செப்பேடு சமூகப் பணி செய்யும் திருச்சி புதுக்கோட்டை கரூர் மாவட்டங்களில் 6 ஊராட்சி மன்றங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களுக்கு 200 கன்றுகள் என 1200 மரக்கன்றுகளை அம்மக்கள் பிரதிநிதிகள், மக்களோடு இணைந்து கல்லூரி மாணவர்களின் சுற்றுச்சூழல் செயல்பாடாக மரங்களை நட்டு வளர்ப்போம் என உறுதி அளித்தார்.
நாகமங்கலத்தின் அருகிலுள்ள சூரக்குடி பட்டி கிராமத்தில் செயல்பாட்டு ரீதியாக குறுங்காடுகளை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் உருவாக்கும் விதமாக கிராம மக்களோடு இணைந்து பள்ளி மாணவ மாணவிகளோடு மரங்களை நட்டனர். இவ்விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் , அருட்தந்தைகள், அருட் சகோதரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியினை ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வீதி நாடகம், பாரம்பரிய பறை இசை , சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்கள், மரம் நடுதல், சிறப்பு சொற்பொழிவு என சிறப்பாக நிறைவு பெற்றது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.