அங்குசம் பார்வையில் ‘ஹனு-மான்’. எப்படி இருக்கு !

0

அங்குசம் பார்வையில் ‘ஹனு-மான்’.

'hanu man reviews
‘hanu man reviews

தயாரிப்பு: பிரீமியர் எண்டெர்டெயிண்ட் நிரஞ்சனா ரெட்டி. டைரக்டர்: பிரசாந்த் வர்மா. ஆர்ட்டிஸ்ட்ஸ்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர். ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா, இசை: அனுதீப், கெளரா ஹரி, கிருஷ்ணா செளரப், தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’சக்திவேலன். பிஆர்ஓ: யுவராஜ்.

பள்ளி மாணவன் மைக்கேல் மனசுக்குள் சூப்பர் மேன் ஆக வேண்டும் என்ற வெறி. இதைக் கண்டிக்கிறார்கள் அம்மாவும் அப்பாவும். ரெண்டு பேரும் இருந்தால் நம்மால் சூப்பர் மேனாக முடியாது என்ற முடிவுடன் பெற்றோரையே தீ வைத்துக் கொளுத்துகிறான். இளைஞரான பிறகு என்னன்மோ ஆராய்ச்சி பண்ணி சூப்பர் மேனாகிறான். கட் பண்ணினா..

- Advertisement -

ஆந்திராவின் மலை அடிவாரத்தில் உள்ள கிராமம். அம்பாயிரம் அடி உயரத்தில் ( கதை விடுறதுன்னு டைரக்டரே முடிவு பண்ணிட்ட பிறகு எத்தனை ஆயிரம் அடி இருந்தா நமக்கென்ன) உள்ள அனுமார் சிலையின் நேரடி மேற்பார்வையில் இருக்கு அந்த கிராமம். அங்கே சின்னச் சின்ன திருட்டு செய்து ஜாலியாக இருக்கான் அனுமந்து ( ஹீரோ தேஜா சஜ்ஜா) இவனது அக்கா வரலட்சுமி சரத்குமார். திடீர்னு ஒரு நாள் அனுமந்துக்கு அனுமார் சக்தி கிடைத்து பலே சூப்பர் மேனாகிறான்.

4 bismi svs

அதன் பின்னர் நடக்கும் வீடியோ கேம் தான் இந்த ‘ ஹனு-மான்’ . வில்லன் பேரு மைக்கேல். ஹீரோ பேரு அனுமந்து. இதிலிருந்தே உங்களுக்குப் புரியும் தெரியும், இந்த வீடியோ கேமை யார் செட் பட்டிருப்பாய்ங்க, யாருக்காக செட் பட்டிருப்பாய்கண்ணு. வருகிற 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா. அதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் வட இந்தியாவில் கொண்டாட்டங்கள் நடக்கும்.

இதெல்லாம் முடிந்ததும் தான் பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் தேர்தல் கமிஷன் என்ற சுதந்திரமான அமைப்பு. இதையும் கணக்குப் போட்டுத்தான்…. இந்த 12- ஆம் தேதி இந்த கேம் ரிலீஸ் ஆகுதுன்னா… சங்கிக் கூட்டத்தின் மத-சதி வெறியை அனைவரும் புரிந்து தெளிந்து கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா முழுக்க காவி அடித்தால் பத்தாது, வானம் வரை அடிக்க வேண்டும் என்ற வெறி கொண்டு இந்த கேம் சினிமாவை ரிலீஸ் பண்ணி… Very Danger Game – ஐ ஆரம்பித்துவிட்டது சங்கி கும்பல். ‘ ஹனு – மான் ‘ என டைட்டிலில் போட்டவர்களின் யோக்கியதை, வரலட்சுமி சரத்குமார் பெயரை, வசலட்சுமி சரத்குமார் என போட்ட போதே தெரிந்துவிட்டது.

அதேபோல் இடைவேளை என தமிழிலிலோ..அல்லது INTERMISSION என ஆங்கிலத்திலோ போடாமல் “ஜெய் ஸ்ரீராம்” என இந்தியில் போட்டு தங்களின் பேராபத்து குணத்தை தைரியமாக காட்டும் அளவுக்கு சினிமாவை கைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதுல வேதனையான விசயம் என்னன்னா.. இந்த கேம் சினிமாவை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்திருக்கும் நம்ம ‘சக்திவேலன் பிலிம் ஃபேக்ட்ரி’ சக்திவேலனும் சங்கிகளின் சதிவலைக்குள் சிக்கியது தான்.

– மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.