பொதுக்குளத்தில் 10,000 அரளைக்கற்களை எடுத்த குற்றச்சாட்டில் குணசீலம் ஊராட்சி மன்றத்தலைவர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொதுக்குளத்தில் 10,000 அரளைக்கற்களை எடுத்து விற்ற சர்ச்சையில் குணசீலம் ஊராட்சி மன்றத்தலைவர் ! யன்பாட்டில் இருந்த குளத்தின் கட்டுமானத்தை இடித்து 10,000-க்கும் அதிகமான அரளைக் கற்களை எடுத்துச் சென்றுவிட்டார்” என்று ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் கிராம மக்கள்.

திருச்சி மாவட்டம், முசிறியையடுத்த கல்லூர் என்ற கிராமத்தில்தான் இந்த பஞ்சாயத்து. கல்லூர், மஞ்சக்கோரை, வேப்பந்துரை ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய குணசீலம் பஞ்சாயத்தின் தலைவராக செயல்படும் குருநாதனுக்கு எதிராகத்தான் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கிராம மக்களின் சார்பாக புகார் கொடுத்திருக்கும் இராஜேந்திரனிடம் பேசினோம். “கல்லூர் – குணசீலம் செல்லும் சாலையில் அய்யாற்று கரையோரம் அமைந்திருக்கும் குளம் இன்று வரையில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த குளத்தின் நடுவே, கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், பாபு என்பவர் தலைவராக இருந்த காலத்தில் 10,000-க்கும் அதிகமான அரளைக் கற்களை கொண்டு தெப்பக்குளம் கட்டப்பட்டது. நன்றாக இருந்த இந்தக் கட்டுமானத்தைத்தான் தற்போது, பொக்லைன் வைத்து இடித்துவிட்டு, அதில் பயன்படுத்தப்பட்டிருந்த அரளைக் கற்களை எடுத்துச் சென்றுவிட்டார். ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதியிலிருந்து 28 ஆம் தேதி வரையில் 10,000-க்கும் அதிகமான கற்களை எடுத்துவிட்டார்.

கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் கிராம மக்கள் சார்பில் புகார் தெரிவித்தோம். வாத்தலை போலீசில் அழைத்து விசாரித்தார்கள். அவர்களிடம் ஆகஸ்டு-30 ஆம் தேதி பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாக ஆவணத்தை காட்டினார். 24 ஆம் தேதியே எடுத்த கல்லுக்கு எப்படி 30 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்ற  முடியும்? நாங்கள் கையெழுத்து போட முடியாது என்றுவிட்டோம். அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.” என்கிறார்கள்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

“துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் இல்லாமல் இதுபோல தீர்மானம் நிறைவேற்றவே முடியாது. சிதிலமடைந்த ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றாலே, முறையாக அனுமதி பெற்று டெண்டர் விட்டாக வேண்டும். நல்ல நிலையில் இருந்ததை சிதைத்து எடுத்திருக்கிறார். இது தவறான முடிவு.” என்கிறார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்தியநாரயணன்.

முசிறி ஏ.பி.டி.ஓ. கலைச்செல்வியிடம் பேசினோம். “நான் வெளியூரில் இருக்கிறேன். மேனேஜரிடம் பேசிவிட்டுதான் எதையும் சொல்ல முடியும். மாதந்தோறும் பஞ்சாயத்து கூடி தீர்மானம் போடுவார்கள். நீங்கள் சொல்வது போல் எந்த தகவலும் என்னிடம் வரவில்லை. விசாரித்து சொல்கிறேன்.” என்கிறார்.

முசிறி பி.டி.ஓ. அண்ணாதுரையிடம் பேசினோம். “சும்மாதானே இருக்கிறது என்று பயன்படுத்திவிட்டேன் என்றார். அது தவறு என்றோம். எடுத்த கற்களை எடுத்த இடத்திலேயே போட்டு விடுகிறேன் என்றிருக்கிறார். பேசி முடித்துவிட்டோம்.” என்கிறார்.

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சி) குமாரிடம் பேசினோம், “இந்த விவகாரம் எனது விசாரணையில் இருந்து வருகிறது. எஃப்.ஐ.ஆர். நகல் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.

குற்றச்சாட்டுக்குள்ளான பஞ்சாயத்து தலைவர் குருநாதனிடம் பேசினோம். “ஊரில் வேலை வெட்டி இல்லாதவர்கள் நாலு பேர் செய்யும் வேலை இது. ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இவ்வாறு செய்கிறார்கள். பொறாமை காரணமாக இருக்கலாம். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பது காரணமாக இருக்கலாம். இவர்களுக்கு எப்போதுமே இதுதான் வேலை. நீங்கள் வளர்ந்து வரும் பத்திரிகை இதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க. முறைப்படி தீர்மானம் போட்டுதான் கல்லை எடுத்திருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் எல்லாம் இல்லை. ஆக-30 ஆம் தேதி தீர்மானம் போட்டிருக்கிறோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

செப்டம்பர்-07 ஆம் தேதிதான் கல்லை எடுத்திருக்கிறோம். அதற்குரிய வீடியோ ஆதாரம் இருக்கிறது. கல் திருடு போய்க்கொண்டிருந்தது, அதனை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். உண்மைக்கு மாறான தகவல். அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். ஏ.டி.பஞ்சாயத்து, கலெக்டர் அலுவலகத்திலிருந்தும் விசாரித்தார்கள். எல்லோரிடமும் பதில் சொல்லிவிட்டோம். பிரச்சினை ஒன்றுமில்லை.” என்கிறார் அவர்.

சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

“பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்தது. நாங்கள் கட்டியிருக்கிறோம். எங்கு கூப்பிட்டாலும் நாங்கள் வந்து சாட்சி சொல்கிறோம் என்று ஊர் பொதுமக்கள் சொல்கிறார்கள். சமூகவிரோதிகள் திருடி சென்றுவிடுவார்கள் என்று இவர் எப்படி எடுத்து வைக்கலாம். அதுவும் நன்றாக இருந்ததை பொக்லைன் வைத்து பெயர்த்து எடுத்து சென்றிருக்கிறார்.

அந்தக் கல்லை பயன்படுத்தி சமுதாய நலக்கூடம் கட்டுகிறேன். சுற்றுச்சுவர் கட்டுகிறேன் என்கிறார். எதுவொன்றைக் கட்டினாலும், அதற்குரிய எஸ்டிமேட் போட்டுத்தானே செய்வார்கள். இந்தக் கல்லுக்கும் விலை வைத்திருப்பார்கள் தானே. அதெல்லாம் இருக்கட்டும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், ஊர் பொதுமக்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்திருக்கலாமே? முறையாக, தீர்மானம் நிறைவேற்றி செய்திருக்கலாமே? ஏன் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல வேண்டும்? இன்னும் சொல்லப்போனால், அந்த குளம் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. அவர்களுக்கே தெரிவிக்காமல் இதை செய்திருக்கிறார்.” என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்.

“நல்ல நோக்கத்தில் செய்வதாக இருந்தால் பகலில் செய்திருக்கலாமே? இரவோடு இரவாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிந்த வரையில் டிராக்டரில் 33 லோடு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு 42 இலட்சம் டெண்டர் விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்க அதற்காகத்தான் இந்த கல்லை எடுத்துச் சென்றேன் என்பதை எப்படி ஏற்க முடியும் சொல்லுங்கள்? ” எனக் கேள்வி எழுப்புகிறார், 2008-09 ஆம் ஆண்டு இந்த கட்டுமானத்தை கட்டியவரும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான பாபு.

பாபு எ ராமன்
பாபு எ ராமன்

இதையெல்லாம் கேட்கும்பொழுது நமக்கு தலை சுற்றுகிறது. ஊர் பொதுக்குளத்திலிருந்து அரளைக்கற்களை எடுத்து சென்றுவிட்டார் ஊர்த்தலைவர் என்று ஆகஸ்டு-27 ஆம் தேதியே மாவட்ட ஆட்சியரிடமும் ஆக-28 அன்று திருச்சி எஸ்.பி.யிடமும் புகார் கொடுத்துள்ள நிலையில், அந்தக் கல்லை எடுப்பதற்கான தீர்மானமே ஆக-30 ஆம் தேதி போடப்பட்டிருக்கிறது என்பது முதல் குற்றச்சாட்டு.

அதுவும்கூட, அன்றைய கிராமசபைக்கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானமே கொண்டுவரப்படவில்லை. பிரச்சினையாகி அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், செப்டம்பர்-17 ஆம் தேதிதான் அவசரம் அவசரமாக அப்படி ஒரு தீர்மானத்தை எழுதி, ஆக-30 ஆம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டப் பதிவேட்டில் காலியாக இருந்த இடத்தில் இடைச்செருகலாக சேர்த்திருக்கிறார்கள். அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதலைக்கூட அவர்கள் பெறவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

 

முதலில், திருடு போய்விடும் என்றுதான் பத்திரப்படுத்தினேன் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர். பின் அவரே, சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கும் காம்பவுண்ட் சுவர் எழுப்புவதற்கும் பொதுப்பயன்பாட்டுக்குத்தானே அதனை பயன்படுத்தினேன் என்கிறார். இந்த முரண் ஒருபுறமிருக்க; எதுவாயினும், ஊர் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பின் செய்திருக்கலாமே என்பதுதான் ஊர் பொதுக்களின் பிரதான குற்றச்சாட்டாகவும் அமைந்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசாரின் விசாரணையில் இந்த விவகாரம் இருந்து வருவதால், நாமும் இதற்குமேல் கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. அதிகாரிகளின் நடவடிக்கை நல்ல பதிலை வழங்கும் என்றே நம்புகிறோம்.

–  அங்குசம் புலனாய்வுக்குழு

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.