திருச்சி விமான நிலையத்துக்குள் ஆட்டோக்கள் நுழைய தடை! கார்ப்பரேட்டுகளின் நவீன தீண்டாமை!
திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ செல்ல விமான நிலைய நிர்வாகம் தடை விதித்திருப்பதாகவும்; மீறி செல்வோர் மீது அபராதம் விதிக்கும் அளவிற்கு அடியாட்களை வைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சுமத்துகிறார்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமாக இயங்கிவரும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இந்த விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், AITUC மாநகர தலைவர் முருகேசன், CITU ஆட்டோ ரிக்ஷா சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை விக்கி, சமூக நீதிப் பேரவையின் நிறுவனர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர் சம்சுதீன், மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட செயலாளர் காசிம், ஏர்போர்ட் பகுதி மக்கள் பிரதிநிதி பிலால், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் ஏர்போர்ட் கிளை தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணலிதாஸ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் ஜீவா, ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் செந்தில், மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மா.செ.உறுப்பினர் ஆதிநாரயணமூர்த்தி, SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் நியமத்துல்லா, CPI கட்சியின் ஏர்போர்ட் பகுதி பொறுப்பாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் பழனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நிறைவாக, ஏர்போர்ட் ஆட்டோ சங்க கிளை தலைவர் அமீர் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.