அங்குசம் பார்வையில் ‘கடைசி உலகப்போர்’ திரைப்படம் திரைவிமர்சனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘கடைசி உலகப்போர்’ – தயாரிப்பு : ‘ஹிப்-ஹாப் தமிழா எண்டெர்டெய்ன்மெண்ட்’. கதை—திரைக்கதை—வசனம்—பாடல்கள்—இயக்கம் & ஹீரோ : ஹிப்-ஹாப் ஆதி. மற்ற நடிகர்—நடிகைகள் : அனகா, நாசர், நட்டி[எ] நட்ராஜ், அழகம் பெருமாள், சிங்கம்புலி,முனீஸ்காந்த்,  ஹரிஷ் உத்தமன், கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், ஷா ரா. ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா, எடிட்டிங் : பிரதீப் ராகவ், ஸ்டண்ட் டைரக்டர் : மாதேஸ் மேத்யூ, ஆர்ட் டைரக்டர் : ஆர்.கே.நாகு, காஸ்ட்யூம் டிசைனர் : கீர்த்தி வாசன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : வாசுதேவன். பி.ஆர்.ஓ. : சதிஷ்குமார் [ எஸ் 2 எண்டெர்டெய்ன்மெண்ட் ]

2028-ல் ஐ.நா.சபையிலிருந்து சீனா, ரஷ்யா, இலங்கை உட்பட சில நாடுகள் வெளியேறி ‘ரிபப்ளிகன்’ என்ற அமைப்பின் கீழ் அணி சேர்ந்து அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைத்தாக்கும் மூன்றாம் உலகப் போர் நடந்து அதில் அணுகுண்டும் பயன்படுத்தினால் எந்த மாதிரியான பேராபத்து நிகழும் என்ற பகீர் கற்பனை உண்மையுடன் [ ஒருவேளை நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன்னா உலகம் போகும் போக்கு அப்படித்தான் இருக்கு ] தனது அபாரமான கற்பனையுடன் மிக்ஸ் பண்ணி, சமூகத்திற்கு நல்ல சேதி சொன்னதற்காக தமிழன்  ஹிப்-ஹாப் ஆதியை ஆரத்தழுவி வரவேற்கலாம். சிலபல குறைகள் இருந்தாலும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

தமிழ்நாட்டின் முதல்வராக நாசர், அவரது மகளாக அனகா, நாசரின் கூடவே இருந்து குழிபறிக்கும் பதவி, பண ஆசை வெறியனாக நட்டி, புரட்சி வீரன் புலிப்பாண்டியாக அழகம் பெருமாள் [ கிட்டத்தட்ட அல்ல, அச்சு அசல் சீமானே தான் ] ’ரெவெல்யூஸன் ஸ்டார்’ ரிஷிகாந்தாக ஷா ரா [ ரஜினி மாதிரி ] மக்களுக்கான போராளியாக இளங்கோ குமரவேல், அந்த மக்களில் ஒருவன் தமிழரசனாக ஹிப்-ஹாப் ஆதி என கேரக்டர்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பெரும்பாலான காட்சிகள் க்ரீன்மேட் மற்றும் கிராபிக்ஸ் உதவியுடன் எடுக்கப்பட்டிருந்தாலும் பல காட்சிகளில் மனித உழைப்பையும் நம்பியிருக்கிறார் ஹிப்-ஹாப் ஆதி. ஹீரோயின் அனகா அழகாக இருக்கிறார், நன்றாகவும் நடித்திருக்கிறார்,

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஒரு சில காட்சிகளில் அடக்கி வாசித்திருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் நட்டு கழண்டது  போல கடுப்பேத்துகிறார் நட்டி [ எ ] நட்ராஜ். அதே போல் புலிப்பாண்டி அழகம்பெருமாள்.  அடேங்கப்பா…  இவரை வைத்தே சீமானை சுளுக்கெடுத்துவிட்டார் ஆதி.

இப்ப சங்கி கும்பல் கூவிக்கிட்டிருக்கிற, கூப்பாடு போட்டுக்கிட்டிருக்கிற  “ஒரே நாடு ஒரே தேர்தல்” சிஸ்டம் வந்தால் என்னாகும்? சர்வாதிகாரம் சதியாட்டம் போடும், நாடே சர்வநாசமாகும் என்பதை ரிபப்ளிகன் படையை வைத்து ரிவீட் அடித்திருக்கிறார் தமிழன் ஆதி.

இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து இருபதாவது நிமிடத்திலேயே க்ளைமாக்ஸ் ஆரம்பித்து நீ…………….ண்டு கொண்டே போவது பெரும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

இருந்தாலும் 874 ஆண்டுகள் கழித்து அதாவது 2898-ல் இந்தியாவின் கடைசி நகரமாகவும் முதல் நகரமாகவும் காசி தான் இருக்கும் என பைத்தியங்கள் உளறிக் கொட்டிய சினிமாவுக்கு மத்தியில் இந்த ‘கடைசி உலகப் போர்’ சினிமாவைப் பாராட்டுவதில் தப்பேயில்லை.

–மதுரை மாறன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.