ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!

சூப்பர் ஹிட்டான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரையை மையமாகக் கொண்ட புதிய கதையில் நடிக்க உள்ளார். ‘லார்க் ஸ்டுடியோஸ்’ கே குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.

அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையிலான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

ஒளிப்பதிவு : எம். சுகுமார், படத்தொகுப்பு: கணேஷ் சிவா

அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

—  ஜெ.டி.ஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.