‘ஹெய் வெசோ’ படம் பூஜையுடன் ஆரம்பம்!
தெலுங்கு சினிமாவில் ‘வஜ்ர வராஹி சினிமாஸ்’ என்ற பேனரில் சிவா சேர்ரி, ரவி கிரண் ஆகியோர் இணைந்து தங்களின் முதல் தயாரிப்பாக ‘ஹெய் வெசோ’ என்ற புதிய படத்தின் பூஜையையும் ஷூட்டிங்கையும் ஹைதரபாத்தில் நேற்று தொடங்கினார்கள். தெலுங்கு டி.வி.யிலும் சினிமாவிலும் தனி அடையாளத்துடன் நடித்துக் கொண்டிருக்கும் சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் மூலம் பிரசன்ன குமார் கோட்டா என்பவர் டைரக்டராக அறிமுகமாகிறார். டைட்டில் டிசைனிலேயே பல சம்பவங்களையும் உண்மைகளையும் சொல்லியுள்ளார்கள்.
படத்தின் ஹீரோயின்களாக நடாஷா சிங், நக்ஷா சரண், அக்ஷரா கெளடா, வில்லனாக ‘கோர்ட்’ படப்புகழ் சிவாஜி, மற்றும் மொட்டை ராஜேந்திரன், கெட்டப்ஸ்ரீனு, பெவதா துஹிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : சுஜாதா சித்தார்த், இசை : அனுதீப் தேவ், எடிட்டிங் : சோட்டா கே.பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு : பிரம்மா கடாலி, எழுத்து : சிந்தா ஸ்ரீனிவாஸ், ஸ்டண்ட்: பிருத்வி, பி.ஆர்.ஓ : யுவராஜ்.
தெலுங்கில் உருவாகி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகப் போகும் ‘ஹெய் வெசோ’வின் டைட்டிலை தெலுங்கு ஹீரோ நிகில் வெளியிட்டார். டைரக்டர்கள் வசிஷ்டா, சந்து மொண்டேட்டி, மெஹர் ரமேஷ் ஆகியோர் கேமராவை ஆன் பண்ண, டைரக்டர் வி.வி.வினாயக் க்ளாப் அடித்து முதல் சீனுக்கு ‘ஆக்ஷன்” சொன்னார்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.