இந்து மக்கள் கட்சியின் திருச்சி மா.செ.அதிரடியாக கைது !
இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் கைது!!
திருச்சி பொன்மலைப்பட்டியலில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றதால், மேற்படி பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து பெற்றோர் ஒருவர் நடுவீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகாரை அடுத்து திருச்சி காவல்துறை கைது செய்தனர்.
கட்சியின் மா.செயலாளரே இப்படி நடந்து கொண்டது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.