தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து கூறிய அர்ச்சகா்கள் சங்கம்!
சமூகநீதிச் சுடரொளி – மக்கள் மனங்களில் மாண்புடைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முத்துவேல் கருணாந்தி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்து நாள் வாழ்த்துச் செய்தி…!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பாலின வேறுபாட்டைத் தகர்த்து, ஈராயிரம் ஆண்டுகளாக கருவறை இருள் ஒரு மைல்கல் அகற்றியவர். ஆரியத்திற்கு (மனுதர்மம்) எதிராக தொடர் போர் செய்துவரும் இந்தியா காணாத மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்திய சமூகநீதிச் சுடரொளி.
மக்கள் மனங்களில் மாண்புடைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முத்துவேல் கருணாந்தி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்து நாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க,,!
இந்துகளின் கட்சி என உரிமை கொண்டாடும் பாஜகவினர், பாரம்பரியமிக்க தமருபுர ஆதினத்தை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றனர், இந்தி திணிப்பு ஏற்படுத்தும் பாஜகவினர் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
இந்து சமய அறநிலைத்துறை என்ற துறை இருக்கக் கூடாது என்பதற்காக பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.
கருவறையிலும் தமிழ் குடமுழக்கிலும் தமிழில் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள் .
இந்து விரோத கட்சி’ என்று குற்றம் சாட்டப்பட்ட திமுக அரசுதான் திருச்சி வயலூர் திருக்கோயில் குடமுழக்கில் பார்ப்பனர் அல்லாத இரண்டு இந்து அர்ச்சகர்களை ஈடுபட வைத்தது.
இந்து ஆன்மீக நம்பிக்கையை மூலதனம் ஆக்கி, அதிகாரத்தைப் பிடித்த பாஜக இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் வாழ்வு ஆதாரத்தை அழிக்கிறது.
ஆனால், மக்களுக்கு சமத்துவ உணர்வும் சுயமரியாதையும் உணர்வும் ஊட்டி, மக்கள் வாழ்வில் மட்டுமில்லாமல் – தெய்வத் திருக்கோவில்களிலும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டியுள்ளார் – திராவிடர் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தமிழர்களின் தன்மான ஆட்சிப் பயணம் தொடங்கியது. அப்பயணத்தை அண்ணாவிற்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னெடுத்தார். கலைஞருக்கு பின்பு, தளபதி ஸ்டாலின் வழியில் அப்பயணம் தொடர்கிறது.
திராவிடத் தமிழர் தன்மான ஆட்சியின் மிக முக்கியமான சமூகம் நீதித் திட்டம் ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்துவது. இதற்கான சட்டத்தை 1972ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்தார். அப்போது சில வஞ்சகக் கூட்டத்தார்,
நீதிமன்றம் படியேறி நீதி என்ற பெயரில் அநீதியாக சதி செய்து செய்து தடுத்தனர். 2006 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 2007 2008 ஆம் ஆண்டு பயிற்சி பள்ளியில் படித்து முடித்து 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர்கள் தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது, தாயுமானவராக அரவணைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் வழியில் தளபதியும் கருவறையின் சாதி பேதத்தையும், பாலின பேதத்தையும் ஒழித்து, சமத்துவ ஆன்மீகத்தைக் கட்டி எழுப்பப் போராடி வருகின்றார். அவர் பக்கம் நாங்கள் நிற்கின்றோம்.
ஆகஸ்ட் 14, 2021 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் 29 பார்ப்பனர் பார்ப்பனர்கள் அல்லாத அர்ச்சகர் மாணவர்களை நியமனம் முதலமைச்சராக அவர்கள் வழங்கினார்.
ஈராயிரம் ஆண்டுகளாக கருவறை இருள் ஒரு மயில்கள் அகற்றியவர் முதலமைச்சராக அவர்கள்.
உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நூற்றுக்கணக்கான வழக்குகளை தொடர்ச்சியாக ஆரியர்கள் பிஜேபி ஆர் எஸ் எஸ் பார்ப்பனர்கள் போன்ற தொடர்ச்சியான வழக்குகள் போட்டு வருகிறார்கள் இது எதிர்த்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் உறுதியாக நின்று அர்ச்சகர் மாணவர்களுக்காக ஆதரவாக நின்று போராடி வருகிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் மூலம் இந்தத் திட்டம் நிறைவேறக்கூடாது என்பதற்காக, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்திற்கும், கொலை மிரட்டல்கள் விடுத்தும், அச்சுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பியும் வருகின்றன. உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள்
2007 2008 ஆம் ஆண்டு 207 ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் மொத்தம் 207 மாணவர்கள்
2022 -2023 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் SC (4), BC (38), MBC (31) , OC (21)
94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு. 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவற்றில் 11 மாணவிகள் சிறீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பயிற்சி முடித்து விட்டார்கள்.
2024 2025 ஆம் ஆண்டுக்கான அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 95 அர்ச்சகமானவர்கள் தற்போது படித்து வருகிறார்கள்.
அதில் பாலின சமத்துவத்தோடு அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடக்க வேண்டும் என்று கூறி இருந்தோம் அதில் இரண்டு ஆண்டுகளாக அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடந்து முடிந்துள்ளன அதில் பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு படித்து முடித்துள்ளார்கள் தற்போது பெண்கள் படித்து வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை ஒரு சிறப்பான செயல்பாட்டை செய்து வருகிறது.
கருசுமக்கும் பெண்கள் கருவறைக்குள் என்ற முழக்கத்தை முன்வைத்தார் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை பல குடமுழுக்குகளும் அரிய வகையான ஆன்மீக சம்பந்தமான நூற்றுக்கணக்கான நூல்களையும் ஆய்வு செய்து அதை புத்தகமாகவும் வெளியிட்டு அல்லது துறை சார்பாக இலவச திருமணங்கள் பழமையான கோயில் கண்டறிந்து அதை திருப்பணி செய்வது கோயிலில் உள்ள ஓவியங்கள் சிற்பங்கள் கோயில் உடைய கலாச்சாரங்களும் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வழிகாட்டுதலும் சிறப்பான செயல்பாடுகளும் செய்து வருகிறார்.
இந்த பிறந்தநாளில் ஆரியத்திற்கு எதிராக சனாதன மனுதர்மத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
அதில் தமிழகத்தில் உள்ள பெரிய கோயில் ஆகம கோவில்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சென்னை பார்த்தசாரதி திருக்கோயில் போன்ற கோயில்களில் மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு கருவறையில் சமத்துவமாக அர்ச்சகராகவும் ஓதுவராகவும் பணியாற்ற நீங்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக உங்களிடம் கோரிக்கை முன்வைக்கிறோம்.
முதல்வர்ன் 72ஆம் பிறந்த நாளில் “ பாசிசத்தை வீழ்த்த, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் ஜனநாயகக் போர்க்களம் காண்பது முக்கியம்.
இப்போர்களத்தில் கண்ணனாக நின்று, மு.க. ஸ்டாலின் எல்லோரையும் வழிநடத்திச் செல்கிறார். இது தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பது ஆகும்.
இந்த பிறந்தநாளில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்தல் அதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
மேற்படி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக
(i) தடையற்ற அர்ச்சகர் நியமனத்திற்கு உரிய சட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.
(ii)அனைத்து சாதி இந்துக்கள் அர்ச்சகர் நியமனத்திற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
(iii) 16 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு 2007-2008 ஆண்டில் மாணவர்களுக்கு தற்போது வரை உள்ள மாதங்களுக்கு இழப்பீடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மாதங்களிலும் இழப்பீட்டுத் தொகையமாதம் ரூபாய் 20,000 வேலை வழங்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டும்
(iv) அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும்
(vi) தமிழக அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து பணியாணை வழங்கப்பட்டு கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் மாணவர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வும், கோயிலில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்
(Vii) அனைத்து சாதி அர்ச்சக பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஐந்து பேர் இறந்து விட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
(Viii) உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் அமர்வு அர்ச்சகர் நியமனத்திற்கு விதித்த தடையை நீக்க உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழக முதல்வரின் நேரடி தலையீடு இல்லாமல் அர்ச்சகர் மாணவர் திட்டம் – ஆலயங்களில் சமத்துவம் நிறைவேற வாய்ப்பு இல்லை.
எனவே கருவறையில் பார்ப்பனிய அதிகாரத்தை தகர்க்க காலம் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியாரின் நினைவுநாளில், கலைஞரின் கனவும், தமிழக முதல்வரின் நியமனங்களும், எதிர்கால நியமனங்களும் கேள்விக்குள்ளான சூழலில் உரிய கோரிக்கையை தமிழக முதல்வர் முன்பு வைக்கிறோம்.
உரிய நடவடிக்கை எடுத்து, ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் முழுமையாக அகற்றக் கோருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் முற்போக்கு இயக்கங்கள் ஆன்மீக அமைப்புகள் மற்றவர்களும் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம
பார்ப்பனியத்தையும் சனாதனத்தையும் எதிர்த்து நாம் தொடர்ச்சியாக போராட வேண்டும் என்று உறுதியோடு நாம் அனைவரும் களத்தில் நிற்போம். திராவிட இயக்கத்தின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து நிற்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் இம்முயற்சிக்கு தமிழக மக்கள் , ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள் துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்..
”ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்” என்கிற நற்சிந்தையுடையோர் ஒவ்வொருவரின் ஆன்மிக உள்ளத்தோடு, நம்முடைய முதலமைச்சர் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” வாழவேண்டும் என்று திருச்செவ்வடிகளை நினைந்து இறைஞ்சுகிறேன்.
வா.ரங்கநாதன், தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு