அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டிடிவி தினகரன் செய்த வரலாற்று பிழை !

திருச்சியில் அடகு நகையை விற்க

2024இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அமமுக கட்சி பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.  கட்சி ஒரு இடத்தில்கூட் வெற்றிப்பெறவில்லை. அதிமுகவின் வெற்றியைச் சில தொகுதிகளில் அமமுக பாதிப்பு செய்தது மட்டுமல்லாமல், டெபாசிட் இழக்கவும் செய்தது என்பதைத் தேர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடியை டிடிவி தினகரன் எதிர்க்க அடிப்படைக் காரணம், டிடிவி தினகரன் சித்தி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று செல்லும் நேரத்தில் எடப்பாடியை முதல்வராக்கிச் சென்றார். டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்றும் அறிவித்து சென்றார். எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற சில மாதங்களில் டிடிவி தினகரன் கட்சிப் பொறுப்பில் நீக்கப்பட்டார். பின்னர் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். 4 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுதலையாகி சசிகலா சென்னை திரும்பினார். அதிமுக பொறுப்பில் இருந்த ஒரு சராசரி தொண்டன்கூட சசிகலாவை பார்க்கவில்லை. இதனால் எடப்பாடியைத் துரோகி என்று அறிவித்தார் தன்னுடைய சினத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

What's next for VK Sasikala, TTV Dhinakaran and OPS?டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தலைவரால் 18 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். பெயர் – தொகுதி விவரம்

தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி)

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஆர். முருகன் (அரூர்)

மாரியப்பன் கென்னடி (மானாமதுரை)

கதிர்காமு (பெரியகுளம்)

ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்)

ப. பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி)

வி. செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி)

எஸ். முத்தையா (பரமக்குடி)

பி. வெற்றிவேல் (பெரம்பூர்)

என். ஜி. பார்த்திபன் (சோழிங்கர்)

எம். கோதண்டபாணி (திருப்போரூர்)

டி. ஏ. ஏழுமலை (பூந்தமல்லி)

எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்)

ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை)

ஆர். பாலசுப்பிரமணி (ஆம்பூர்)

‘எதிர்கோட்டை’ எஸ். ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆர். சுந்தரராஜ் (ஒட்டப்பிடாரம்)

கே. உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்)

மேலும் பெரம்பூர், திருவாரூர், சாத்தூர் ஓசூர் ஆகிய 4 தொகுதிகளிலும் சேர்த்து 22 தொகுதிகளுக்கு 2019 மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அமமுக கட்சியின் முன்னணி தலைவராக இருந்த தங்கத் தமிழ்செல்வன் சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் போட்டியிடுவோம். மக்களவைக்குப் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும் எடப்பாடியை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றால் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். டிடிவி தினகரன் “திமுகதான் முதல் எதிரி. திமுகவோடு கூட்டணி கிடையாது”என்றார். மக்களவையில் ஓர் இடத்தில்கூட வெற்றிப் பெறவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 இடங்களிலும் அமமுக படுதோல்வி அடைந்தது. திமுக 22 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில் மட்டும் வெற்றிப் பெற்று அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பில் நீடித்து 2021 தேர்தலில் முதல்வர் பொறுப்பை இழந்தார். தங்கத் தமிழ்ச்செல்வன் சொல்லியபடி அமமுக திமுகவோடு கூட்டணி அமைத்திருந்தால இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று, எடப்பாடி ஆட்சியை இழந்திருப்பார். எடப்பாடியை முதல்வர் பொறுப்பில் நீடிக்க செய்த முதல் வரலாற்று பிழையை டிடிவி தினகரன் செய்தார்.

பின்னர் தொடர்ந்து எடப்பாடியை எதிர்த்தே வந்தார். இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்ட பின் அவர் தினகரனோடு இணைந்து செயல்பட்டு, எடப்பாடிக்குப் பல குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தார். 2025ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். எடப்பாடியை ஏற்கமுடியாது என்று உறுதியாக அறிவித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மிகவும் இரகசியமாக உள்துறை அமைசசர் அமித்ஷாவைத் தில்லியில் டிடிவி தினகரன் சந்தித்தார். தொடர்ந்து எடப்பாடியும் அமித்ஷாவையும் சந்தித்தார். செய்தியாளர்களிம் பேசிய எடப்பாடி,“அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. டிடிவி தினகரன் சேர்க்கப்படுவாரா என்பதற்குக் காலம் பதில் சொல்லும்” என்று மென்மையான வார்த்தையில் பேசினார்.

டிடிவி தினரகன்
டிடிவி தினரகன்

கடந்த ஜனவரி 5ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் பேசிய டிடிவி தினரகன்,“வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும். ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியோடு அமமுக கூட்டணி அமைக்கும்” என்றார். தவெகவோடு அமமுக கூட்டணி அமைக்கும் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருந்தாரகள். சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மதுராந்தகம் பொதுக்கூட்ட பிளாக்ஸ்-இல் டிடிவி தினகரன் படம் இடம் பெற்றது. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று அறிவித்தார். உடனே பிளக்ஸ் அப்புறப்படுத்தப்பட்டது. யாருடன் கூட்டணி என்பதை மாவட்டச் செயலாளர்களுடன் பேசி 21ஆம் தேதி அறிவிப்பேன் என்று கூறினார். அதே நாளில் பாஜகவின் தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயலைச் சந்தித்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்தார்.

TTV Dhinakaran (@TTVDhinakaran) / Posts / Xடிடிவி தினகரன் அண்மை காலத்தில் உறுதியாக சொல்லிவந்த சொல்லில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். இதற்குக் காரணம், டிடிவி தினகரன் மீதுள்ள வழக்குகளைச் சுட்டிக்காட்டி மிரட்டி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியைத் தேவையானால் சந்திப்பேன் என்ற டிடிவி தினகரன் அறிவித்தார். எடப்பாடி பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்ததை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். டிடிவி தினகரன் அரசியலில் 2ஆவது முறையாக வரலாற்று பிழையைச் செய்துள்ளார். இந்தக் கூட்டணியால் டிடிவி தினகரனுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதைத் தெரிந்தே கூட்டணி சேர்ந்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

 தினகரன் மீதான வழக்கு விபரங்கள்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு (FERA)

இது அவர் மீதுள்ள மிகப்பழைய வழக்கு. 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் தொடரப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லேஸ்’ வங்கியில் சுமார் 1.04 கோடி அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக டெபாசிட் செய்தது மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இது தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு

2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக (அம்மா) அணிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது டெல்லி சிபிஐ இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் டிடிவி தினகரன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையில் உள்ளது, அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

—   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.