குதிரை பொங்கல் ஆஹா !
குதிரை பொங்கல்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வன பகுதி கிராமங்களில், வளர்ப்பு குதிரைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன இங்கு ஏராளமான குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவ்வனப்பகுதிகளில் விவசாயமாக பல்வேறு பொருட்கள் விளைச்சல் செய்யப்பட்டு வருகின்றனர்.
பல நூறு ஏக்கர்களில் எலுமிச்சை, பலா உள்ளிட்ட பிற நறுமண பொருட்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் இப்பகுதிகளுக்குள் செல்ல ,எவ்வித சாலைகள் ஏதும் இல்லாத கரடு முரடான மலை வழிப் பாதைகளாக உள்ளது.
உள்காடுகளில் இருந்து இப்பொருட்களை மூடைகளில் சுமந்து கொண்டு சென்று ,வர கால்நடையாக குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 100க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று தங்களது குதிரைகளை அலங்கரித்தும், சிறப்பு வகை உணவுகளை அளித்தும், கழுத்து மற்றும் கால் பகுதிகளில் சலங்கை மணிகள், கலர் கலராக மலர்மாலைகள் அணிவிக்கப்படுகிறது.
பின்பு அனைத்து குதிரைகளையும் ஒன்றாக தங்களது கிராம பகுதி சாலைகளில் ஓடி வர செய்தும் ,அன்றைய தினத்தில் மட்டும் சுமைகளை சுமந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. போட்டிகளில் வெற்றிப் பெற்ற குதிரைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் பேசிய போது.. தங்களது குடும்பத்திற்கு உதவிகரமாக உறுதுணையாக இருக்கும் இக்குதிரை குதிரைகளை இன்றைய தினத்தில் கடவுளாக நினைத்து, அதனை சந்தோஷப்படுத்தி உற்சாகம் கொடுத்து ஊக்கப்படுத்துவது மன நிம்மதியை தருவதாகவும் தெரிவித்து கொண்டனர்.
– ராமதாஸ்