அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதலாளியாக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு, தொழில்கள்

ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –35

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல்துறையில் தொழில் வாய்ப்புகளில் இத்தொடரில் வித்தியாசமான வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்.

Chef Consultant

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஹோட்டல் தொழில் செய்ய பலருக்கு ஆசை இருக்கும். அவர்களுக்கு உதவ Chef consultant தொழில் மிகவும் பயனுள்ளதாகும். கிட்சன் வடிவமைப்பு துவங்கி, சமையல் பாத்திரங்கள் வாங்குவது, மெனு உருவாக்கம், அதற்கான ரெசிபி உருவாக்கம், அதற்கான பயிற்சி போன்ற சேவைகள் செய்வது Chef Consutant தொழில் ஆகும். இவர்களின் ஆலோசனையின் பேரில் தொழில் துவங்குவது எளிதாகிறது. உணவகங்களை புதிதாக துவங்குபவர்கள், தொடர்ந்து மேம்படுத்த நினைப்பவர்கள், மெனு மாற்றம், விழாக்கால சாப்பாட்டுத் திருவிழா போன்ற சமயங்களில் Chef Consultant பங்கு மிகப்பெரியது.

செஃப்கன்சல்டன்ட் ஆக விரும்புபவர்கள், முதலில் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பணிபுரிந்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், மெனு உருவாக்கம், கிட்சன் டிசைனிங் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முதல்வர் பிறந்தநாள்

Hotel Industryஅனுபவமிக்க பல செஃப்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. உதாரணமாக, இவ்வாறு பல ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு தனது ஆலோசனைகளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று வழங்கி வருகிறார். பல உலக சாதனைக்கு சொந்தக்காரரான பிரபல Celebrity chef ஆன Chef பழனிமுருகன்.

Mix ArtRecipe Developer

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

உணவு என்பது எப்பொழுதும் ஓர் உணர்வைக் கொடுக்கும். மக்களுக்கு எப்பொழுதும் வித்தியாசமான உணவினை சுவைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நல்ல உணவை சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல இன்றைய காலத்தில், புதிய உணவினை உருவாக்குவது, புதிய ரெசிபிக்களை கலந்து செய்து மக்களை திருப்தி படுத்துவது என்பதும் மிகவும் முக்கியமாக பிரலபமடைந்து வருகிறது. Recipe Developer என்பது பலருக்கும் அறியப்படாத ஒரு தொழில் வாய்ப்பாக உள்ளது. இதுவும் செஃப் தொழிலாக இருந்தாலும், இந்த தொழிலுக்கு உலகளாவிய மதிப்புமிக்க தொழில் ஆகும். உதாரணமாக KFC நிறுவனரே தனது ரெசிபி மூலம்தான் பிரபலம் ஆனார். இன்று இது ஒரு காபி ரைட் போல வளர்ந்து வருகிறது. அதற்கான ஃபார்முலாக்களை நாம் ரகசியமாக வைத்திருக்கத் தெரிய வேண்டும். மேலும், ரெசிபி உருவாக்கி அதனை வியாபாரமாக்கலாம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் ரெசிபிகளை உருவாக்கும் திறன் மிக்கவபராக இருந்தால், இந்த தொழில் எளிமை. அதனுடன், தொழில் சார்ந்த சில அனுபவங்களையும் பெற்றால் இத்தொழிலில் நன்கு வளரலாம்.

Food Influencer

இன்றைய சமூக ஊடக வாழ்க்கை முறையில், நாம் பலரும், எதை வாங்கினாலும், எங்கு சென்றாலும், Instagram, Youtube, Facebook, Google Review போன்றவற்றை பார்த்த பின்னர்தான் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்கிறோம். அப்படித்தான், சாப்பாட்டு பிரியர்கள் துவங்கிய Food Vlogs, இன்று Food Reviews செய்து, அதன் மூலம் அவர்கள் Food Influencers ஆக உருவாகியுள்ளனர். இவர்கள் சொல்லும் உணவகங்களுக்கு பலர் நம்பிக்கையுடன் செல்கின்றனர்.

Hotel Industryஇவ்வாறு Food Influencer ஆக இருப்பவர்களுக்கு, ரெஸ்டாரண்ட்கள் மூலமும், சமூக ஊடகங்கள் மூலமும் வியாபாரம் நடக்கும். இந்தத் தொழிலை செய்வதற்கு, உணவை சுவைக்கும் திறன், அதனை சரியாக எடுத்துரைக்கும் தன்மை, வீடியோ பற்றிய தெளிவு, சமூக ஊடம் பற்றிய விபரங்கள் ஆகிவற்றை அறிந்திருக்க வேண்டும்.

Food Influencer-களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு, உணவின் சுவை அறிவு மட்டுமல்ல, தரமான உணவு, உணவு பாதுகாப்பு முறைகள், உணவு செரிமானத் தன்மை போன்றவையும் ஆகும். இவை அனைத்தையும் அறிந்து ஆராய்ந்து சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் இவர்கள் ஆவார்கள். இவ்வாறு சமூக பொறுப்புடன் செயல்படுபவர்களைத் தொடர்பவர்கள் மிகவும் மகிழ்வாக வெகு நாட்கள் தொடர்வார்கள்.

சமையல் துறையில் பல சுவாரசியங்கள் உள்ளன. அவற்றைக் கற்றுக் கொடுத்தும் நாம் வளரலாம். அதனைக் குறித்து அடுத்த தொடரில் காண்போம்.

—  கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.