திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையில் உலக பார்வை தினந்தையொட்டி மனிதசங்கிலி விழிப்புணர்வு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையில் உலக பார்வை தினந்தையொட்டி மனிதசங்கிலி விழிப்புணர்வு!

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளை, டயமண்ட் சிட்டி குயின் மற்றும் ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

Srirangam MLA palaniyandi birthday

ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு கண் நலம் பற்றிய செய்திகளை வழங்கி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி ஆண்டுதோறும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.  கண்நோயால் பாதிக்கப்படுவோர் மிக அதிக அளவில் பரவி கிடக்கின்றனர். உலக பார்வை தினத்தன்று கண்நலம் பற்றிய மிக முக்கிய செய்திகளையும், ஒரு நோய் வந்தபின் குணப்படுத்துவதைக் காட்டிலும் அதனை வராமல் தடுப்பது, ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவது போன்ற சில செய்திகளையும் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுத்தப்பட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட காவல் துணை ஆணையர் அன்பு மற்றும் துணை உதவி ஆணையர்  குத்தாலிங்கம் ஆகியோர் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினைத் தொடங்கி வைத்தனர். இதில் 1000 மேற்பட்ட ஜமால் முகமது கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகள், ஜமால் முகமது கல்லாரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். காஜா நஜீமுதீன்,ஜோசப் கண்மருத்துவமனை இயக்குனர் டாக்டர். பிரதீபா மற்றும் ஜமால் முகமது கல்லூரி முதல்வர்  டாக்டர் இஸ்மாயில் முகமது ஆகியோர் முன்னிலையில், அனைவரும் தங்களது கண்களை பாதுகாத்துக் கொள்வாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ரோட்டரி மாவட்டம் 3000ன் முன்னாள் ஆளுநர் Rtn. கோபால் மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பலூன் பறக்க விட்டார்கள்.

இதில் ரோட்டரி பட்டர்பிளை, டயமண்ட் சிட்டி குயின்ஸ் சங்கங்களின் தலைவர்கள் Rtn. சுபா, Rtn. சரண்யா செல்வராஜ், செயலாளர்கள் Rtn. பராசக்தி, Rtn. பிரியா லோகநாதன் மற்றும் இரு சங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி  சுபாபிரபு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.