முட்புதரில் சமயபுரம் கோவில் உண்டில் – புரளி கிளப்பியது யார் ! விசாரிக்கும் போலிஸ் !

0

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றதாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த மாரியம்மனை தரிசிக்க திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்து தங்களது நேர்த்திக்கடனை சமயபுரம் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் முக்கியமான இடத்தில் வகிப்பது சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்த கோவிலில் பழனி முருகன் கோயிலுக்கு அடுத்து உங்களில் காணிக்கையில் அதிக வருமானம் வரும் கோயிலாக உள்ளது. இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்களை மாதம் இருமுறை திறந்து என்னும் போது ரொக்கமாக சுமார் ஒரு கோடிக்கு மேலும் தங்கமாக ரூபாய் 3 கிலோவும், 4 கிலோவுக்கு மேல் வெள்ளி பொருட்களும் மற்றும் அயல் நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்று வருகின்றன.

https://businesstrichy.com/the-royal-mahal/

சமயபுரம் கோவில்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பின்புறம் முப்புதலில் கோயில் உண்டியல் ஒன்று கிடப்பதாக 11.10.2023 தகவல் பரவியது. இது தொடர்பாக கோவில் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சி. கல்யாணி தரப்பில் மறுப்பு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்  சமயபுரம் கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 38, திருப்பணி உண்டியல்கள் 1, அன்னதானம் நன்கொடைக்கான உண்டியல்கள் சமயபுரம் கோவிலில் உஜினி கோயில் ஆதி மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் 1, என மொத்தம் 42 உண்டியல்கள் உள்ளன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

எந்தெந்த உண்டியல் எந்தெந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளது. தற்போது முட்புதலில் கிடப்பதாக கூறப்படும் உண்டியல் கோவில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் அருகில் இருந்தது இதன் அடிப்பகுதி முழுவதும் சேதம் அடைந்ததால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த உண்டியல் மாற்றப்பட்டு வேறு உண்டியல் வைக்கப்பட்டது.

சேதமடைந்த இந்த உண்டியல் கோவில் திருமண மண்டபம் வளாகத்தில் கோவிலில் பயன்படுத்திய தேவையில்லாத பொருட்களை போட்டு வைத்துள்ள இடத்தில் இருந்தது இதை யாரோ எடுத்து தனியாக போட்டு புகைப்படம் எடுத்து கோவில் உண்டியல் முற்பகலில் கிடப்பதாக தவறான தகவலை பரப்பி உள்ளனர்.

கோவில் நிர்வாகத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் பக்தர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையிலும் இது போன்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது? இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சமயபுரம் காவல் நிலையத்தில் கோவில் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வரும் என்கிறார்கள் கோவில் தரப்பினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.